மீநாயகன்![]() மீநாயகன் (சூப்பர்ஹீரோ) என்பது ஒரு வீர கதாபாத்திரமாகவும் தனித்தித்திறமை வாய்ந்தவர்காலகாவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டுள்ளவர்கள் மீநாயகன் ஆவார்கள். இவர்களின் பாத்திரம் தங்கள் பிரபஞ்சத்திற்கு சூப்பர் வில்லன்களிடமிருந்து ஏற்படும் தீமையை எதிர்த்துப் போராடுவதற்கும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மீநாயகன் ஒரு புனைகதைகளின் வகையாகும். இது சிறப்பு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டது, குறிப்பாக 1930 களில் இருந்து அமெரிக்க காமிக் புத்தகம் மற்றும் திரைப்படங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. சில மீநாயகன்கள் (எடுத்துக்காட்டாக பேட்மேன்) ஒரு சாதாரண மனிதனாகவும் இயற்க்கைக்கு எதிரான சக்திகள் இல்லாமலும் உலகத்திற்கு வரும் ஆபத்துகளை முறியடிப்பதற்காக தொழிநுட்ப உதவியுடன் போராடும் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டு இருக்கும்.[1][2][3] ஆரம்பத்தில் மீநாயகன் காதாபாத்திரங்கள் கேலிசித்திரைகள் மூலம் தீமை செய்பவனை எதிர்த்து போராடும் பாத்திரமாக உருவாக்கப்பட்டது. கால போக்கில் அது ஒரு கற்பனை மனித காதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.[4][5] பெரும்பாலும் சூப்பர் ஹீரோக்கள் அவர்களை வெளிக்காட்ட விருப்பாமல் முகமூடி அணிந்தும், அவர்களுக்கேற்ற ஆடைகளை அனைத்தும் தோற்றம் அழிப்பார்கள். ஸ்பைடர் மேன், ஆன்ட் மேன், அயன் மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, வால்வரின், பிளாக் பாந்தர், கேப்டன் மார்வெல், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், கோஸ்ட் ரைடர் போன்ற பல மீநாயகன் கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமானது. வரலாறு1917 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தான் மீநாயகன் (சூப்பர் ஹீரோ) என்ற சொல் உருவானது. தனித்துமானவனாகவும் சிறப்பு மிக்கவனாகவும் தனித்துவமான ஆடையில் சாகசம் செய்யும் இராபின் ஊட் போன்ற நாட்டுப்புற ஹீரோக்கள் தான் இந்த வார்த்தைக்கு முன்னோடிகள் ஆகும்.[6] 1903 ஆம் ஆண்டு முதல் முகமூடி அணிந்து பழிவங்கும் வரலாற்று கற்பனை வாய்ந்த நாடகம் த சிகார்லட் பிம்பர்னல். இந்த நாடகம் முதல் சூப்பர் ஹீரோ அடையாளத்தை பிரபலப்படுத்தியது. அதை தொடர்ந்து ஜிம்மி டேல் (1914), ஸிரோ (1919), பக் ரோஜர்ஸ் (1928) போன்ற முகமூடி அணிந்த காதாபாத்திரங்கள் தோன்றத் தொடங்கியது. 1936 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பான்டோம் என்ற காமிக் துண்டு ஹீரோ கதாபாத்திரங்கள் தோன்றின. அதை தொடர்ந்து படோருஸ் (1928) மற்றும் போபியே (1929) மற்றும் நாவலாசிரியர் பிலிப் வைலியின் கதாபாத்திரமான ஹ்யூகோ டேனர் (1930) உள்ளிட்ட சூப்பர் வலிமையுடன் ஆடை அணியாத கதாபாத்திரங்கள் தோன்றின.[7] 1940 களில் ப்ளாஷ், கிரீன் லான்டர்ன் மற்றும் ப்ளூ பீட்டில் போன்ற பல மீநாயகன் கதாபாத்திரங்கள் அறிமுகமானது. அதை தொடர்ந்து மார்வெல் காமிக்ஸ் வருகைக்கு பிறகு கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர் மேன், அயன் மேன், எக்ஸ்-மென் போன்ற பல மீநாயகன்கள் அறிமுகமானார்கள். அவர்களின் கதாபாத்திரங்கள் திரைப்படமாகவும் வடிவமைக்கப்பட்டு மிகப்பெரிய வணிக வெற்றியும் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில்தமிழில் 1950 ஆம் ஆண்டுகளில் வரைகதை மூலம் மீநாயகன் கதாபாத்திரங்கள் தோன்றினர். அதை தொடர்ந்து கந்தசாமி (2009, முகமூடி (2012), ஹீரோ (2019) போன்ற சில தமிழ் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வெளியானது. மாயாவி, மாய மந்திரன், சூப்பர் சுந்தரி போன்ற தமிழ் தொலைக்காட்சியில் மீநாயகன்கள் தொடர்களும் ஒளிபரப்பானது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia