மீரோப்சு (Merops) என்பது பஞ்சுருட்டான் குடும்பத்தின் ஒரு பெரிய பேரினமாகும். இது ஆப்பிரிக்கா, ஆசியா, ஆத்திரேலியா மற்றும் ஐரோப்பாவைப் பூர்வீகமாகக் கொண்ட மெரோபிடே குடும்பத்தின் பசாரிபார்மிசு பறவைகளின் நெருங்கிய குழுவாகும். இக்குடும்பத்தின் சிற்றினங்கள் நன்கு நிறமுடைய இறகுகள், மெல்லிய உடல்கள் மற்றும் பொதுவாக நீளமான மத்திய வால் இறகுகளால் வகைப்படுத்தப்படுகின்றன. இவை முக்கியமாகப் பூச்சிகளை உண்கின்றன; குறிப்பாகத் தேனீக்கள், குளவிகள் மற்றும் ஆர்னெட்டுகள். இவற்றை இவை வானில் பறந்து பிடிக்கப்படுகின்றன.
அனைத்து பஞ்சுருட்டான்களும் மீரோப்ப்சு பேரினத்தில் துணைக் குடும்பமான மீரோபினேயில் உள்ளன. இதில் மூன்று ஆசிய இனங்கள் நிக்டியொரிந்தினே துணைக் குடும்பத்தில் (நிக்டியோர்னிசு பேரினம் மற்றும் மெரோபோகன் பேரினம்) வைக்கப்பட்டுள்ளன. மீரோப்சு சிற்றினமானதுசுவீடன் இயற்கை ஆர்வலர் கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் 1758-ல் சிசுடமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இந்தப் பேரினத்தின் மாதிரி இனம்ஐரோப்பியப் பஞ்சுருட்டான் ஆகும்.[2]பண்டைய கிரேக்கம் மொழியில் இந்த பேரினத்தின் பெயரானது பஞ்சுருட்டான் எனப் பொருள்படும்.[3]
மீரோப்பிடேயின் உட்கரு மற்றும் மைட்டோகாண்ட்ரிய டி. என். ஏ. வரிசையின் அடிப்படையிலான பேயேசியன் ஒருமித்த இனவரலாறு ("நிக்டியோர்னிசு அதர்டோனி" மற்றும் "மீம். ரெவோலி" தரவில்லை)[4]
படம்
பொதுப்பெயர்
விலங்கியல் பெயர்
பரவல்
கறுந்தலை பஞ்சுருட்டான்
மீரோப்சு பிரேவேரி
அங்கோலா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, ஐவரி கோஸ்ட், காபோன், கானா, நைஜீரியா மற்றும் தெற்கு சூடான்.
நீலத்தலை பஞ்சுருட்டான்
மீரோப்சு முல்லேரி
கேமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, காங்கோ குடியரசு, காங்கோ ஜனநாயக குடியரசு, காபோன், ஈக்குவடோரியல் கினியா மற்றும் கென்யா
↑Marks, Ben D.; Weckstein, Jason D.; Moyle, Robert G. (2007). "Molecular phylogenetics of the bee-eaters (Aves: Meropidae) based on nuclear and mitochondrial DNA sequence data". Molecular Phylogenetics and Evolution45: 23–32. doi:10.1016/j.ympev.2007.07.004. பப்மெட்:17716922.