முகம்மது ஆமிர்
முகம்மது ஆமிர் (Mohammad Amir,Urdu: محمد عامر பிறப்பு:ஏப்ரல் 13 1992, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இடதுகை விரைவு வீச்சாளரான இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2009 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடி வருகின்றார். சுமாராக மணிக்கு 140 முதல் 145 கிலோமீட்டர் வேகத்தில்பந்துவீசும் திறன் பெற்றவர் ஆவார்.2007 ஆம் ஆண்டிலிருந்து முதல் தரத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடி வருகிறார். 2009 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தனது 17 ஆவது வயது முதல் விளையாடி வருகிறார். 2009 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி அணி வெற்றி பெறுவதற்கு உதவியாக இருந்தார்.[1][2] இவருக்கு அணியின் முன்னாள் விரைவு வீச்சாளர் மற்றும் பயிற்சியாளரான வசீம் அக்ரம் சிலநுனுக்கங்களைக் கற்றுக் கொடுத்தார்.[3] இவரின் 18 ஆவது வயதில் இவர் வசீம் அக்ரமை விட அறிவாளியாக உள்ளதாக முன்னாள் வீரர்களான வசீம் அக்ரமும் , ரமீஸ் ராஜா ஆகியோர் தெரிவித்தனர்.[3] ஆகத்து 29, 2010 ஆம் ஆண்டில் இவர் சூதாட்டப் புகாரில் சிக்கினார். இவரின் மீதான புகார் நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து இவருக்கு ஐந்து ஆண்டுகள் துடுப்பாட்டம் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின் இவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையிடம் பொதுமன்னிப்பு கேட்டார்.[4] இவரின் வயதைக் காரணம் காட்டி இவருக்கு ஐந்து ஆண்டுகள் தடையும் இவருடன் புகாரில் சிக்கிய சல்மான் பட் 7 ஆண்டுகளும் மற்றும் முகம்மது ஆசிப்பிற்குப் பத்து ஆண்டுகளும் தடை விதிக்கப்பட்ட்டது.[5] இவரின் தடைக்காலம் செப்டம்பர் 2, 2015 இல் முடிவிற்கு வருவதால் இவர் உள்ளூர்ப் போட்டிகளில் ஈடுபட இருப்பதாக சனவரி 29, 2015 இல் தகவல் வெளியானது.[6] 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் இவரை சிட்டகாங் வைக்கிங்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது. 2016 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[7] நிறைய போட்டிகளில் விளையாடிய பிறகே தனது முதல் தேர்வுத் துடுப்பாட்ட கேட்சைப் பிடித்தார். அக்டோபர் 31, 2016 இல் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தனது 20 ஆவது தேர்வுப் போட்டியில் டேரன் பிராவோ அடித்த பந்தை அற்புதமாகப் பிடித்து அவரை வீழ்த்த உதவினார்.[8] 2010 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் வீசிய ஒரே ஓவரில் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டியில் ஒரு ஓவரில் அதிக இலக்குகள் வீழ்த்தி சாதனை படைத்தனர்.[9][10] ஆரம்பகால வாழ்க்கைமுகமது ஆமிர் ஏப்ரல் 13, 1992 இல் பாக்கித்தானில் பிறந்தார்.[11] ஏழு குழந்தைகளில் இவர் தான் இளையவர். தனக்கு வசீம் அக்ரமை மிகவும் பிடிக்கும் என்றும் அவர்தான் தனது ஆதர்சன குரு என்றும் அவரைத் தொலைக்காட்சிகளில்பார்க்கும் போது அவர் எவ்வாறு பந்துவீசுகிறார் என்பதை நுனுக்கமாகப் பார்த்து அவர்போல் பந்துவீசியதாகவும் கூறினார்.[12] சர்வதேச போட்டிகள்2009 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . சூலை 4 , இல் காலேயில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானர். இந்தப் போட்டியின் துவக்க ஓவர்களை வீசிய இவர் முதல் ஆட்டப் பகுதியில் 21 பந்துகளில் 4 ஓட்டங்கள் எடுத்து துசாரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 19 ஓவர்களை வீசி மூன்று ஓவர்களை மெய்டனாக வீசினார். அதில் 74 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 11 ஓவர்களை வீசி இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசினார். அதில் 38 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[13] இந்தப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களில் வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . சனவரி 11 இல் ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் துவக்க ஓவர்களை வீசிய இவர் முதல் ஆட்டப் பகுதியில் 17 பந்துகளில் 10 ஓட்டங்கள் எடுத்து ஆலிவர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் பந்துவீச்சில் 15 ஓவர்களை வீசி இரண்டு ஓவர்களை மெய்டனாக வீசினார். அதில் 36 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இரு இலக்குகளைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 20 ஓவர்களை வீசி இரு ஓவர்களை மெய்டனாக வீசி 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இரு இலக்குகளைக் கைப்பற்றினார். பின் எட்டு பந்துகளைச் சந்தித்து 4 ஓட்டங்களை எடுத்து ரபடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 107 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.[14] ஒருநாள் போட்டிகள்2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி வாகையாளர் கோப்பையில் இவர் அறிமுகமனார். இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாடினார். துவக்க ஓவரின் இரன்டாவது பந்துவீச்சில் ரவி போவராவின் இலக்கினைக் கைப்பற்றினார். அந்தத் தொடரில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடினார். அந்த போட்டியில் இவர் 23 ஓட்டங்ளை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20போடியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதன் மூலம் இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிக்குத் தேர்வானார். உமர் குல் , சோகைல் தன்வீர் மற்றும் அப்துர் ராஃப் போன்றோருடன் வேகப் பந்துவீச்சாளராகத் தேர்வானார்.[15] பன்னாட்டு இருபது202009 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 உலகக் கோப்பையில் நடைபெற்ற 7 போட்டிகளில் ஆறு போட்டிகளில் துவக்க ஓவர்களிலேயே இவர இலக்கினை வீழ்த்தினார். சராசரியாக 145 கி.மீ. வேகத்தில் இவர் பந்துகளை வீசினார்.[16] இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் அதிகபட்சமாக 152 கி.மீ. வேகத்தில் வீசினார்.[17] 2017 ஐசிசி வாகையாளர் கோப்பை2017 ஆம் ஆண்டில் ஐசிசி வாகையாளர் கோப்பையில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் போட்டியில் 8 ஓவர்களை வீசினார் ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணிகு எதிரான போட்டியில் 10 ஓவர்களை வீசினார் ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் ஆஞ்சலோ மாத்தியூசுன் இலக்கினைக் கைப்பற்றினார். 10 ஓவர்களை வீசி 53 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து இரு இலக்குகளைக் கைப்பற்றினார். மட்டையாட்டத்தில் 63 பதுகளில் 28 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia