முகம்மது மாக்கான் மாக்கார்
சேர் முகம்மது மாக்கான் மாக்கார் (Mohamed Macan Markar, 7 செப்டம்பர் 1877 - 10 மே 1952) என்பவர் இலங்கையின் குடியேற்றக்கால பிரபலமான அரசியல்வாதியும், தொழிலதிபரும் ஆவார்.[1] இவர் இலங்கை அரசாங்க சபையில் உட்துறை அமைச்சராகவும்,[2] சட்டவாக்கப் பேரவை உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் இருந்தவர். இலங்கையின் தெற்கே காலியில் பிரபலமான தொழிலதிபராக இருந்த உதுமா லெப்பை மரிக்கார் மாக்கான் மாக்கார் என்பவருக்குப் பிறந்தவர். கொழும்பு உவெசுலி கல்லூரியில் கல்வி கற்றவர். கல்லூரியில் துடுப்பாட்ட IX அணியில் சேர்ந்து விளையாடினார். படிப்பை முடித்த பின்னர் கொழும்பு நகரில் குடும்பத் தொழிலான நகை வணிகத் தொழிலில் ஈடுபட்டார்.[3] அரசியலில்1924 ஆம் ஆண்டில் இலங்கை சட்டவாக்கப் பேரவையிலும், பின்னர் அரசாங்க சபையிலும் உறுப்பினரானார். தகவல், மற்றும் உட்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1948 முதல் 1952 வரை மேலவை உறுப்பினராக இருந்தார். 1938 ஆம் ஆன்டில் இவருக்கு சேர் வழங்கப்பட்டது. இவரது பிள்ளைகள் அகமது உசைன் மாக்கான் மாக்கார் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார். முகம்மது அஜ்வார்ட் மாக்கான் மாக்கார், அலவி இப்ராகிம் மாக்கான் மாக்கார் ஆகியோர் மருத்துவர்கள் ஆவர் இவரது நினைவாக கொழும்பில் கொம்பனித் தெருவில் உள்ள வீதி ஒன்றிற்கு சேர் முகம்மது மாக்கான் மாக்கார் மாவத்தை எனப் பெயரிடப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia