முகலிங்கம், சிறீகாகுளம் மாவட்டம்
முகலிங்கம் (Mukhalingam), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வடக்கில் அமைந்த சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜலுமுரு மண்டலில் அமைந்த தொல்லியல் கிராமம் ஆகும். வம்சதாரை ஆற்றின் இடது கரையில் அமைந்த முகலிங்கம் கிராமம், ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகில் சிசுபால்கர் தொல்லியல் களம் மற்றும் கலிங்கப்பட்டினம் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 837 குடியிருப்புகள் கொண்ட முகலிங்கம் கிராமத்தின் மக்கள் தொகை 3,022 ஆகும். அதில் ஆண்கள் 1,504 மற்றும் பெண்கள் 1,518 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 265 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 63.58% ஆகவுள்ளது. [4]
படக்காட்சிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia