முகுத் மாணிக்கியாமுகுத் மாணிக்கியா (Mukut Manikya) 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திரிபுரா ராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்ச ஆட்சியாளராக இருந்தார். பிரதாப் மாணிக்கியா மற்றும் முதலாம் விசய மாணிக்கியா ஆகியோரின் சுருக்கமான ஆட்சியைத் தொடர்ந்து முகுத் அரியணையைப் பெற்றார். அவர்கள் முறையே இவரது அண்ணன் மற்றும் தந்தைவழி மருமகன்.[1] இவரது உடனடி முன்னோடிகளின் ஆட்சியின் போது இவரது செல்வாக்கு இராணுவத் தலைவர்களின் ஆதரவின் மூலம் உறுதி செய்யப்பட்டது.[2] இது 1489 இல் நிகழ்ந்ததாக நாணயவியல் சான்றுகள் குறிப்பிடுகின்றன [3] இருப்பினும், முகுத்தின் சொந்த ஆட்சி மிகவும் குறுகியதாகவே இருந்தது. அதற்குப் பதிலாக அடுத்த ஆண்டு (அதாவது 1490) தயாரிக்கப்பட்ட நாணயங்கள் இவரது சகோதரர் தான்ய மாணிக்கியாவின் பெயரைக் காட்டுகின்றன.[4] இவர் தலைவர்களின் ஆதரவை இழந்திருக்கலாம். பின்னர் இவரை ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டிருக்கலாம்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia