2015-16 ரஞ்சிக் கோப்பையில் அக்டோபர் 30 அன்று தனது முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். [5] 2015-16 விஜய் அசாரே கோப்பையில் 13 திசம்பர் 2015 அன்று பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார். [6] 2015-16 சையது முஷ்டாக் கோப்பையில் 6 சனவரி 2016இல் இருபது20 போட்டியில் அறிமுகமானார். [7]
சர்வதேச வாழ்க்கை
செப்டம்பர் 2022 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.திசம்பர் 2022 இல், இலங்கைக்கு எதிரான பன்னாட்டு இ20 தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] சூன் 2023 இல், மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம்பெற்றார். [9][10] சூலை 20,2023 இல்டிரினிடாட்டின்போர்ட் ஆஃப் ஸ்பெயின்குயிண்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இரண்டாவது தேர்வுப் போட்டியில் இவர் அறிமுகமானார். [11]
ஆகத்து, 2023 இல் டிரினிடாட்டின் தருபாவில் உள்ள பிரையன் லாரா அரன்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் அறிமுகமானார். [12]