கோபால்கஞ்ச் மாவட்டம்

கோபால்கஞ்ச் மாவட்டம்
गोपालगंज जिला
கோபால்கஞ்ச்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சரண்
தலைமையகம்கோபால்கஞ்ச்
பரப்பு4,000 km2 (1,500 sq mi)
மக்கட்தொகை2,558,037 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,258/km2 (3,260/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை130,536 (6.07%)
படிப்பறிவு67.04%
பாலின விகிதம்1015
வட்டங்கள்2
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 28
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கோபால்கஞ்ச் (Gopalganj) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிட நகரம் கோபால்கஞ்ச் ஆகும். இது சரண் கோட்டத்தில் அமைந்துள்ளது.[1]

மாவட்டத்தின் அமைவிடம்

கோபால்கஞ்ச் மாவட்டத்தின் வடக்கில் மேற்கு சம்பாரண் மாவட்டம், கிழக்கில் கிழக்கு சம்பாரண் மாவட்டம், தென்கிழக்கில் முசாபர்பூர் மாவட்டம் மற்றும் சரண் மாவட்டம், தெற்கில் சிவான் மாவட்டம், மேற்கில் உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டம், வடமேற்கில் உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

கோபால்கஞ்ச் மாவட்டம் கோபால் கஞ்ச் மற்றும் ஹதுவா என இரண்டு உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கோபால்கஞ்ச் உட்கோட்டத்தில் குசைகோட்டே என ஒரு ஊராட்சி ஒன்றியம் கொண்டுள்ளது. ஹதுவா உட்கோட்டத்தில் கதேயா, பஞ்சதௌரி, விஜய்பூர், போரே புல்வாரியா என நான்கு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது.[2]

அரசியல்

கோபால்கஞ்ச் மாவட்டம் வைகுந்தபூர், பரௌலி, கோபால்கஞ்ச், குசாய் கோட்டே, போரே, ஹதுவா என ஆறு சட்டமன்ற தொகுதிகளையும்; கோபால்கஞ்ச் மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.

பொருளாதாரம்

இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் கோபால்கஞ்ச் மாவட்டத்தையும் இந்திய அரசு 2006-இல் அறிவித்துள்ளது. எனவே இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நிதியுதவி வழங்கி வருகிறது.[3]

போக்குவரத்து

லக்னோ - பரவுனி நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 28 கோபால்கஞ்ச் வழியாக செல்கிறது.

மக்கள் தொகையியல்

2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கோபால்கஞ்ச் மாவட்டத்தின் மக்கள் தொகை 2,558,037 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,269,677 ஆகவும்; பெண்கள் 1,288,360 ஆகவும் உள்ளனர்.[4] 4000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1258 நபர்கள் வாழ்கின்றனர். மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001 - 2011) 18.83% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி படிப்பறிவு 67.04% ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 12.43% ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் 0.29% ஆகவும் உள்ளனர்.[5]

மொழிகள்

தேவநாகரி எழுத்துக்களுடன் கூடிய போஜ்புரி மொழி மற்றும் இந்தி மொழி அதிகம் பேசப்படும் மொழிகளாக உள்ளது.[6]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவகள் மற்றும் இசுலாமிய சமயத்தவர்கள் அதிகமாகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் கணிசமாக உள்ளனர்.

புகழ் பெற்றவர்கள்

மேற்கோள்கள்

  1. "Welcome GOPALGANJ". Gopalganj.bih.nic.in. 2011-07-21. Archived from the original on 2011-07-21. Retrieved 2012-08-24.
  2. "DISTRICT ADMINISTRATION". Archived from the original on 2011-07-21. Retrieved 2016-04-12.
  3. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. Retrieved September 27, 2011.
  4. "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.
  5. "Gopalganj District At a Glance". Gopalganj.bih.nic.in. 2011-07-21. Archived from the original on 2011-07-21. Retrieved 2012-08-24.
  6. "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-30. 

26°27′55″N 84°26′30″E / 26.4654°N 84.4416°E / 26.4654; 84.4416

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya