முக்குழியாட்டம்

எலுமிச்சங்காய் அளவுள்ள இரும்புக் குண்டுகளை உருட்டிப் பெரியவர்கள் பொழுதுபோக்காக விளையாடும் விளையாட்டு முக்குழியாட்டம்.

ஆடும் முறை

கெட்டியான தரையில் 3 குழிகள் உருவாக்கப்படும். குழியில் விழுமாறு குண்டுகள் உருட்டப்படும். குழிகள் நேர்க்கோட்டில் இருக்கும். அதே நேர்க்கோட்டுத் திசையிலிருந்து குண்டை உருட்டுவர்.

முதல் குழியில் விழுந்தால் 1 பழம்.
இரண்டாம் குழியில் விழுந்தால் 2 பழம்.
மூன்றாம் குழியில் விழுந்தால் 3 பழம்.
அதிக பழங்கள் வாங்கியவர் வெற்றி.

இவற்றையும் பார்க்க

கருவிநூல்

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya