முசாரப் முர்தசா
முசாரப் முர்தசா (Mashrafe Mortaza,Bengali: মাশরাফি বিন মুর্তজা பிறப்பு: அக்டோபர் 5 1983), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் வங்காளதேசத் துடுப்பாட்டப் அணி சார்பாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பன்னாட்டு இருபது20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் தற்போது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தலைவராக உள்ளார். இதற்கு முன் பன்னாட்டு இருபது20 போட்டிகளின் தலைவராகவும் இருந்துள்ளார். 2009 முதல் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலங்களில் இவர் 1 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 9 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் தலைவராக நியமிக்கப்பட்டார். சகீப் அல் அசன் காயம் காரணமாக விலகியதால் இவர் தலைவராக நியமிக்கப்பட்டார். சிறந்த வங்காளதேச விரைவு வீச்சாளர்கள்ர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் பொதுவாக மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்துகளை வீசுகிறார்.[1] துவக்க ஓவர்களை இவர் வீசுகிறார். மேலும் இவர் மத்திய கள மட்டையாளராகவும் செயல்படுகிறார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒரு நூறும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மூன்று அரைநூறுகளும் அடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். ஏப்ரல் 4, 2017 இல் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் இருப்பதாகத் தெரிவித்தார். பின் ஏப்ரல் 6 இல் தனது ஓய்வினை அறிவித்தார்.[2] சர்வதேச போட்டிகள்பெப்ரவரி 2007ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஒருநாள் தொடர்களில் விளையாடியது. இந்தத் தொடரை வங்காளதேச அணி 3-1 எனும் கணக்கில் கைப்பற்றியது.[3] இந்தத் தொடரில் அதிக இலக்குகள் வீழ்த்தியவ வங்காளதேசப் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 8 இலக்குகளைக் கைப்பற்றி முதல் இடம் பிடித்தார். இவரின் பந்துவீச்சு சராசரி 16.50 ஆகும்.[4] பின் 2007 ஆம் ஆண்டின் துடுப்பாட்ட உலகக்கிண்னத்திற்கு முன்பான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் வங்காளதேச அணி நியூசிலாந்தை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் இவர் சகலத்துறையராக சிறப்பாக செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.[5] பின் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 38 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார் மேலும் மட்டையாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 30* ஓட்டங்கள் எடுத்தார்.[5] இது அந்த உலகக்கிண்ணத் தொடரில் சிறந்த வங்காளதேசப் பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சாக இது அமைந்தது. மேலும் இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். பின் இந்தத் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 9 இலக்குகளை 35.88 எனும் சராசரியோடு கைப்பற்றினார்.[6] பின் துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர் முடிந்த பின் இந்தியத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது. ஆனால் இந்தத் தொடரை 1-0 எனும் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இந்தத் தொடரில் 151 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வாங்காளதேசத் துடுப்பாளர்களில் முதல் இடத்தையும் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்தார். இந்தத் தொடரில் இரண்டு அரை நூறுகளை 50.33 எனும் சராசரியோடு எடுத்தார். மேலும் இதே அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது முதல் அரைநூறினையும் பதிவு செய்தார்.மேலும் 38.33 எனும் சராசரியோடு 6 இலக்குகளையும் கைப்பற்றினார்..[7][8] சான்றுகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia