முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிமுதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (Investor Education and Protection Fund), இந்திய நிறுவன சட்டம் 2013, பிரிவு 125இன் கீழ்[1] இந்திய அரசால் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் நிறுவன முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் ஆகும். ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான செலுத்தப்படாத அல்லது கோரப்படாத தொகைகள் தொகுக்கப்பட்டு முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியில் வரவு வைக்கப்படுகிறது. இதன் நிதிகல் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதிகள் சட்டத்தின் கீழ் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[2] நிதி நிர்வாகம்முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியை நிர்வகிப்பதற்கு, இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர், ஒரு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஏழு உறுப்பினர்கள் கொண்ட முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் உள்ளது.. இந்திய தலைமை தணிக்கையாளர்ருடன் கலந்து நிதி தொடர்பான கணக்குகள் மற்றும் பிற தொடர்புடைய பதிவுகளை பராமரிக்கிறது. இந்த ஆணையம் முதலீட்டாளர்களின் கோரப்படாத நிதியை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்திச் செலவிடும். இதன் கணக்குகளை இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தணிக்கை செய்வார். தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கை மற்றும் வருடாந்திர அறிக்கையைகளையும் ஆணையம் இந்திய அரசுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும். இந்திய அரசு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் வைத்து விவாதம் நடத்தும். நிதிக்கு வரவு வைக்கப்படும் தொகைகள்
நிதியை பயன்படுத்தும் முறைகள்முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் பின்வரும் நோக்கங்களுக்காக மட்டுமே இதன் நிதியை பயன்படுத்த வேண்டும்.
நிதிக்கு வரவு வைக்கப்பட்ட தொகைகயைத் திரும்பப் பெறுதல்நிறுவனத்தால் செலுத்தப்படாத அல்லது கோரப்படாத தொகை, செலுத்தப்படாத ஈவுத்தொகை கணக்கிலிருந்து முதலீட்டாளர் நிதிக்கு மாற்றப்பட்ட தொகையை எந்தவொரு நபரோ அல்லது பங்குதாரரோ முதலீட்டாளர் நிதி பாதுகாப்பு ஆணையத்திடமிருந்து தங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். அவர்கள் சட்டத்தின் பிரிவு 125(3)(a) மற்றும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் (கணக்கியல், தணிக்கை, பரிமாற்றம் மற்றும் திரும்பப் பெறுதல்) விதிகள், 2016 இன் விதி 7(1) இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டபடி, IEPF-படிவம் 5ஐ பூர்த்தி செய்து அனுப்பி பணத்தைத் திரும்பப் பெறலாம். மேற்கோள்கள்வெளி இணிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia