முதொல் நாய்

முதொல் நாய்
பிற பெயர்கள் முதொல் நாய்
கேரவன் நாய்
தோன்றிய நாடு இந்தியா (தக்காணப் பீடபூமி)
தனிக்கூறுகள்
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

முதொல் நாய் அல்லது கேரவன் நாய் ( Mudhol Hound ) அல்லது ( Caravan Hound[1] ) என்பது ஒரு இந்திய நாய் இனமாகும். இந்த நாய் தக்காணப் பீடபூமி கிராமப்புறங்களில் கர்வானி என அறியப்படுகிறது. இது வேட்டை மற்றும் பாதுகாப்பு ஆகிய இரு தேவைகளுக்காகவும் நாய் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய கென்னல் கிளப் (KCI) மற்றும் இந்திய தேசிய கென்னல் கிளப் (INKC) இந்த நாயின் வெவ்வேறு இனப் பெயர்களை அங்கீகரித்துள்ளது. INKC முதொல் நாய் என்ற பெயரையும் KCI கேரவன் நாய் என்றும் பதிவு செய்துள்ளது.

ரூ.5.00 முக மதிப்பு கொண்ட தபால்தலையை முதொல் நாயை அங்கீகாரிக்கும் விதமாக இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டது.[2]

விளக்கம்

தோற்றம்

முதொல் அல்லது கேரவன் நாயிக்கு நன்கு வரையறுக்கப்பட்ட பண்புகள் உண்டு. இதன் தலை நீண்டு குறுகியும், காதுகளிடையே பரந்தும் இருக்கும் வகையிலும். தாடைகள் நீண்டு கடி பொருளை துண்டிக்கும் வகையில் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். மூக்கு பெரியதாகவும் கருத்தும் இருக்கும். காதுகள் தொங்கியவாறு மண்டைக்கு நெருக்கமாக இருக்கும். கண்கள் பெரியதாக முட்டை வடிவில் கருத்து வெளித்தள்ளியது போல இருக்கும். கழுத்து நீண்டு, தூய்மையானதாக தசைப்பிடிப்புடன் தோளுக்கு பொருத்தமானதாகவும் இருக்கும். முன்னங்கால்கள் நீளமானவை. பின்னங்கால்கள் நீண்டு, அகன்று தசைகளுடன் இருக்கும். மார்பு நல்ல வலிமையானதாகவும், விலா புடைத்ததாகவும் இருக்கும். வயிறு ஒட்டி இருக்கும். வால் மிக நீண்டதாக இயற்கையன வளைவுடன் தொங்கியவறும், வலுவானதாகவும், அடிப்பகுதி சிறுத்தும் இருக்கும்.

மேற்கோள்கள்

  1. Menasinakai, Sangamesh (2 August 2015). "Mudhol's top dogs". The Times of India, Newspaper. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Mudhols-top-dogs/articleshow/46014772.cms. பார்த்த நாள்: 2 August 2015. 
  2. "Indian stamps Gallery". Retrieved 29 July 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya