முரட்டு காளை (2012 திரைப்படம்)
முரட்டு காளை 2012 (murattukaalai 2012) இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கே. செல்வ பாரதி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 1980 ல் அதே பெயரில் வெளியான திரைப்படத்தின் மீள்உருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் சுந்தர் சி. மற்றும் சினேகா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் சூன் 15, 2012 ல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் தோல்விப் படமாக அமைந்தது [2] மேலும் இத்திரைப்படம் இந்தி மொழியில் "ரிட்டன் ஒவ் ஜோசிலை" எனும் பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கதைச்சுருக்கம்காளையன் ஓர் சாதாரண மனிதன். ஜல்லிக்கட்டில் பங்கு பற்றி காளைகளை அடகுவது அவனுடைய தொழிலாகும். இவர்களுடைய எதிரி அயலூர் ஜமீன்தாரான வரதராஜன் (சுமன்) என்பவராவார். ஜமின்டார் ஒரு ஊதாரித்தனமான வாழ்வை வாழ்ந்ததுடன். அவர் திருநங்கையான சரோஜாவுடன் (விவேக்) நெருங்கி பழகிவந்தார். வரதராஜனின் தங்கையான பிரியா (சிந்து தொலானி) காளையன் ஓர் ஐல்லிக்கட்டு போட்டியில் பங்கு பற்றி வெற்றியடைந்ததை பார்த்து ஒரு முகமாக காதலித்து வந்தாள். வரதராஜன் தனது தங்கையான பிரியாவை காளையனுக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்தான். அத்தோடு தமது நிலத்தின் ஒரு பகுதியையும் வழங்க தீர்மானித்தான். ஆனால் பிரியா தனது சகோதரர்களை தம்மிடம் இருந்து பிரிக்கத்தான் வருகிறாள் என்பதை அறிந்த காளையன் அவளை திருமணம் செய்ய மறுக்கிறான். பின்னர் புவனா மீது ஆசைகொள்ள படத்தின் மீதிக்கதை அவர்களுக்கு இடையே நடக்கும் காதலையும் அடிப்படையாக கொண்டிருந்தது. நடிகர்கள்
இசைஸ்ரீகாந்த் தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கே. செல்வ பாரதி இத்திரைப்படத்திற்குரிய பாடல்வர்களை எழுதியிருந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia