முரளி சர்மா
முரளி சர்மா (Murali Sharma ; பிறப்பு 9 ஆகஸ்ட் 1972) இவர் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்கு, இந்தித் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். இவர் திரையில் காவல் அதிகாரியாக சித்தரிப்பதில் பரவலாக அறியப்பட்டவர்.[1][2][3][4][5] சர்மா தெலுங்கு, இந்தி, தமிழ், மராத்தி, மலையாளம் போன்ற மொழிகளில் 130க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[6][7] சர்மா தூர்தர்ஷனின் பால்டன் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். அதில் இவர் கர்னல் என்ற முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். கன்ஸ் அண்ட் ரோஸஸ், சித்தாந்த், லாகி துஜ்சே லகன், மஹாயக்யா, விராசத், ஜிந்தகி தேரி மேரி கஹானி, ரிஷ்டே, ஹம்னே லீ ஹைன் ஷாபத் , ரங்கீலா ரத்தன் சிசோடியா போன்ற பல்வேறு நாடகத் தொடர்களில் சர்மா தோன்றியுள்ளார்.[2][3] சொந்த வாழ்க்கைமுரளி சர்மா 9 ஆகஸ்ட் 1972 அன்று ஆந்திராவின் குண்டூரில் பிறந்தார். பின்னர், மும்பையில் வளர்ந்தார்.[8][9] இவரது தந்தை, விருஜ்பூஷன் சர்மா ஒரு மராத்தி, இவரது தாயார் பத்மா சர்மா குண்டூரைச் சேர்ந்த தெலுங்கராவார்.[10] சர்மா தன்னை "பாம்பேவாலா" என்று அழைத்துக் கொள்கிறார். இவர் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவுடன் மும்பையில் உள்ள ரோஷன் தனேஜா நடிப்பு பள்ளியில் நடிப்பு பயின்றார்.[11][12] இவர் நடிகை அஸ்வினி கல்சேகரை மணந்தார்.[13] ![]() சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia