இந்தியாவில் மராத்திய மொழி அதிகம் பேசுவோர்.உலகில் மராட்டியர் உள்ள இடங்கள்
மராட்டி (அ) மராட்டியம் (அ) மராட்டிய மொழி என்பது இந்தியாவின் தேசிய மொழிகளுள் ஒன்றாகும். இது மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாகும்.[1][2] உலகில் ஏறக்குறைய 9 கோடி மக்களால் பேசப்படுகிறது.[3][4]உலகில் அதிகம் பேசப்படும் மொழி வரிசையில், 15-ஆவதாக உள்ளது.[5] இந்தியாவில் அதிகம் பேசப்படும் நான்காவது மொழியாகும்.[6] இதன் எழுத்துகளின் மூல வடிவம் தேவநாகரி ஆகும். இம்மொழியின் இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பு போன்றவை சமசுகிருத மொழியைப் பின்பற்றியே அமைந்துள்ளன. மராட்டி மொழிக்கும் தமிழ் மொழிக்கும் தொடர்பு உள்ளதாக கருதப்படுகிறது.[சான்று தேவை]
மராட்டிய எழுத்து முறைமைகள்
மராட்டிய கீறல்கள் பதினோராம் நூற்றாண்டின் கற்களிலும், தாமிரத் தகடுகளிலும் காணப்படுகின்றன. மகாராசுட்டிரி என்ற பிராகிருதம் எழுத்துமுறையையே அவற்றில் காணப்படுகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, 1950வரை, மோடி அரிச்சுவடியினைப் பின்பற்றி, எழுதும் முறைமை இருந்தது. இம்மோடி எழுத்து முறைமை, தேவநாகரியின் வேறுபட்ட வடிவமாகும்.எழுதுகோலை எடுக்காமல் எழுத, மோடி எழுத்து முறைமை பெரிதும் பயன்பட்டது.மராட்டியப் பேரரசர்கள், இம்மோடி முறைமையையே பின்பற்றினர். 1950 பிறகு இம்மோடி எழுத்துக்களை, அதிக அளவில் அச்சிடும் போது, இடர்களை உருவாக்கியதால் கைவிடப்பட்டது.[7] தற்பொழுது, தேவநாகரி எழுத்து முறைமையையே அதிகம் பின்பற்றுகின்றனர்.
உயிர் எழுத்துக்கள்
கீழ்கண்ட அட்டவணை, மராட்டிய மொழியின் உயிரெழுத்துக்களை அதற்குரிய ஒலிக்கோப்புகளோடு விவரிக்கிறது.