முல்க் ராஜ் ஆனந்த்
முல்க் ராஜ் ஆனந்த் (அக்டோபர் 12, 1906-செப்டம்பர் 28, 2004) ஆங்கிலத்தில் எழுதிய ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். இவரின் படைப்ப்புக்கள் அனைத்தும் பழங்கால இந்தியாவின் சமூக ரீதியாக பிந்தங்கிய மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்திய -ஆங்கில இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்கிறார். மேலும் முல்க் ராஜ் ஆனந்த், ஆர். கே. நாராயணன், அகமது அலி மற்றும் ராஜா ராவ் ஆகியோர் தான் முதன்முதலில் இந்தியாவை மையப்படுத்தி ஆங்கிலத்தில் எழுதினர். இதன் மூலம் எழுத்துலகில், உலக அளவில் இந்தியப் படைப்புகளுக்கான ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. ஆனந்தின் புதினம் (இலக்கியம்), சிறுகதைகள் ஆகியவை சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் உள்ள வறுமை, அவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் இடர்பாடுகள் போன்றவற்றைப் பற்றியே அமைந்திருக்கும்.[1][2] மேலும் பஞ்சாபி மற்றும் இந்துசுத்தானி மொழி ஆகிய மொழிகளில் உள்ள மரபுத்தொடரை ஆங்கில இலக்கியங்களில் முதலில் பயன்படுத்தியவரும் இவர்தான்.[3] இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விபூசன் விருதினைப் பெற்றுள்ளார்.[4] ஆரம்பகால வாழ்க்கை, கல்விமுல்க்ராஜ் ஆனந்த் டிசம்பர் 12, 1905 ஆம் ஆண்டில் பெசாவர் தற்போது பாகித்தான் நாட்டில் உள்ளது. இவர் அமிருதசரச உள்ள கல்சா கல்லூரியில் 1924 இல் பட்டம் பெற்றார்[3] . இங்கிலாந்திற்குச் செல்வதற்கு முன் வறுமையின் காரணமாக உணவகம் ஒன்றில் வேலை பார்த்தார். பின் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1928 இல் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஆனந்த் கத்லீன் கெல்டர் எனும் ஆங்கில நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சுசிலா எனும் மகள் உள்ளார். 1948 இல் இவர்களுக்கு மணமுறிவு ஏற்பட்டது.[5] தொழில்முல்க் ராஜ் ஆனந்தின் இலக்கிய வாழ்க்கையின் உந்துதலாக அவருடைய குடும்பத்தின் இன்னல்களும், சில சாதிய அமைப்புகளின் செயல்பாடுகளும் காரணமாக இருந்தன். இவருடைய முதல் கட்டுரை தற்கொலை செய்துகொண்ட இவரது அத்தையைப் பற்றியதாகும். இவரது அத்தை ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு உணவை பகிர்ந்த காரணத்தினால் அவர்களுடைய குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்.[6][7] இவருடைய முதல் புதினம் தீண்டாமை (அன்டச்சபில்) 1935 இல் வெளியானது. இது இந்தியாவில் தீண்டாமை சமூகத்தில் உள்ள ஒரு நபரின் அன்றாட வாழ்வைப் பற்றியதாகும். பக்கா எனும் கழிவறையை சுத்தம் செய்யும் வேலைசெய்யக்கூடிய நபரின் ஒருநாள் வாழ்க்கையை மையமாக வைத்து இதனை உருவாக்கியிருப்பார். இந்தப் புதினம் ஆனந்திற்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. மேலும் இந்தியாவின் சார்லஸ் டிக்கின்ஸ் எனப் புகழப்பட்டார். மேலும் இதன் அறிமுக உரையை இவரது நண்பரான ஈ. எம். ஃபார்ஸ்டர் எழுதினார்.[8] அதில் சுற்றி வளைத்துப் பேசல், சொல்லாட்சித் திறன் ஆகியவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் இதன் கருவானது நேரடியாக இதயத்திற்குச் சென்று அதில் இருக்கும் மன அழுக்குகளை நீக்கி அதனை சுத்தம் செய்கிறது எனக் கூறியுள்ளார். பிற்கால வாழ்க்கைஆனந்த் சிரின் வஜிஃப்தார் எனும் மரபார்ந்த நடனக் கலைஞரைத் திருமணம் புரிந்தார்.[9] தனது தொன்னூற்று எட்டாம் அகவையில் நுரையீரல் அழற்சி நோயினால் புனேவில் செப்டம்பர் 28, 2004 இல் காலமானார்[9]. புதினங்கள்
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia