முஹம்மது ஹம்துல்லா சயீத்
முஹம்மது ஹம்துல்லா சயீத் (Muhammed Hamdulla Sayeed; பிறப்பு - 11 ஏப்ரல் 1982) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களுள் ஒருவர். 2009 மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் லட்சத்தீவு மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]. பிறப்புமுஹம்மது ஹம்துல்லா சயீத் மைசூரில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் பி. எம். சையது மற்றும் ரஹ்மத் சயீத் ஆகியோருக்கு மகனாக 11 ஏப்ரல் 1982ல் மைசூரில் பிறந்தார்.[2] அரசியல் வாழ்க்கைமுகமது ஹம்துல்லா சயீத், 2009ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில், பதினைந்தாவது மக்களவைக்கு தனது 26 வயதில், மிகவும் இளவயது உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3],[4] 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டு முகமது பைசலிடம் தோல்வியுற்றார். 2024ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில், 2,647 வாக்குகள் வித்தியாசத்தில் 18 ஆவது மக்களவைக்கு இரண்டாம் முறையாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia