மு. ஆறுமுகம்

மு. ஆறுமுகம் (M. Arumugam)(பிறப்பு 26 சனவரி 1935) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் அரிசிப்பாளையம் பகுதியினைச் சேர்ந்தவர். இவர் சேலம் சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். ஆறுமுகம் ஜனதா கட்சி சார்பில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும்,[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1980ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும் சேலம்-II சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1977 சேலம்-II ஜனதா கட்சி 22636 31.41
1980 சேலம்-II அதிமுக 40975 51.57

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 59-60.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya