மு. பொன்னம்பலம்

மு. பொன்னம்பலம் (1939 - 6 நவம்பர் 2024) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் இவர் பங்களித்திருத்தார். 1950களில் கவிதை எழுதத் தொடங்கிய பொன்னம்பலத்தின் முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. இவர் எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

மு. பொன்னம்பலம் யாழ்ப்பாண மாவட்டம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் பன்னிரண்டு வயதிலேயே கவிதை எழுதி இலக்கியத்தில் மு. பொன்னம்பலம் ஈடுபடத் தொடங்கினார். 1980களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த திசை என்ற கிழமை இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.[1]

விருதுகளும் பரிசுகளும்

  • மு. பொன்னம்பலம் எழுதிய "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது.[2]
  • 'தமிழ் நிதி' விருதை கொழும்புத் தமிழ்ச் சங்கம் வழங்கிக் கௌரவித்தது.[3]

இவரது நூல்கள்

  • அது (1968)
  • அகவெளிச் சமிக்ஞைகள் (1980)
  • விடுதலையும் புதிய எல்லைகளும் (1990)
  • பேரியல்பின் சிற்றொலிகள் (1990)
  • யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (1990)
  • கடலும் கரையும் (1996)
  • காலி லீலை (1997)
  • நோயில் இருத்தல் (1999)
  • திறனாய்வு சார்ந்த பார்வைகள் (2000)
  • ஊஞ்சல் ஆடுவோம் (2001)
  • பொறியில் அகப்பட்ட தேசம் (2002)
  • சூத்திரர் வருகை
  • விசாரம்
  • திறனாய்வின் புதிய திசைகள் (2011)

மேற்கோள்கள்

தளத்தில்
மு. பொன்னம்பலம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. "அஞ்சலி: ஈழக் கவிஞர் மு.பொன்னம்பலம்". Hindu Tamil Thisai. 2024-11-10. Retrieved 2025-04-16. {{cite web}}: Text "இடைவிடாத இலக்கிய இயக்கம்" ignored (help)
  2. டான்ஸ்ரீ சோமா புத்தகப் பரிசு
  3. ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் மறைவு..!
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya