மூலாதாரம் (உடற்கூற்றியல்)
பெரினியம் (perineum) என்பது ஆணின் ஆசனவாய்க்கும் விதைப்பைக்கும் இடைப்பட்ட இடமாகும். அதே போல் பெண்ணின் பெண்குறிக்கும் ஆசனவாய்க்கும் இடையே உள்ள இடைவெளியும் ஆகும்.[1] பெரினியம் என்பது அந்தரங்கப் பகுதியின் ஒருங்கிணைந்த எலும்பு வளைவு மற்றும் வால் எலும்புஆகியவற்றுக்கு இடையேயான உடலின் பகுதி, இதில் பெரினியல் பகுதியும் சுற்றியுள்ள கட்டமைப்புகளும் அடங்கும். இதன் எல்லைகள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன என்பதில் சில மாறுபாடுகள் உள்ளன.[2] பெரியனல் பகுதி என்பது பெரினியத்தின் துணைக்குழு ஆகும். பெரினியம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாலியல் ரீதியான உணர்வைத் தூண்டி மகிழ்ச்சியுண்டாக்கும் ஒரு மண்டலமாகும். பெரும்பாலும் முதல் முறையாக மகப்பேறின் போது பெண்களுக்கு பெரினியல் பகுதியில் கசிவு ஏற்படும். மேலும் சில நேரங்களில் பெண்குறியை சற்று பெரியதாக்க அறுவை மூலம் இந்தப் பெரினியல் பகுதி கிழிக்கப்படுகிறது. இதனால் பெரினியம் பாதிப்படைகின்றது. ஆனால் இந்த காயங்களின் அபாயத்தை பெரினியத்தை அடிக்கடி உடற்பிடிப்பு முறையில் தடவிக்கொடுப்பதன் மூலம் குறைக்க முடியும்.[3] பெரினியம் என்ற சொல் கிரேக்கத்திலிருந்து லத்தீன் மொழிக்கு வந்ததாகும் அமைப்புபெரினியம் பொதுவாக ஆண்களிலும் பெண்களிலும் அந்தரங்கப் பகுதியிலுள்ள எலும்புகளின் ஒருங்கிணைவுக்கும் வாலெலும்புக்கும் இடையேயுள்ள மேற்பரப்புப் பகுதி என வரையறுக்கப்படுகிறது. பெரினியம் இடுப்பு உதரவிதானத்திற்கும் கால்களுக்கும் இடையில் உள்ளது. இது ஆண்களுக்கு ஆசனவாய்ப் பகுதி, பெண்களில் யோனிப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வைர வடிவப் பகுதியாகும், .[4] சில நேரங்களில் அதன் வரையறை மாறுபடும்: இது இந்த ப் பகுதியின் மேலோட்டமான கட்டமைப்புகளை மட்டுமே குறிக்க முடியும், அல்லது மேலோட்டமான மற்றும் ஆழமான கட்டமைப்புகளைச் சேர்த்துக் குறிப்பிட இது பயன்படுத்தப்படலாம். பெரினியம் என்பது இடுப்பின் கீழ்ப்பகுதியுடன் தொடர்புடையது. மருத்துவ முக்கியத்துவம்![]() யோனிவழிப் பிரசவத்தின்போது இடுப்புத் தளத்தின் விரிவான சிதைவு ஏற்படுகிறது. ஏறக்குறைய 85% பெண்களுக்கு யோனிவழிப் பிரசவத்தின்போது சிலநேரங்களில் பெரினியல் கசிவு ஏற்படுகிறது. மற்றும் சுமார் 69% பேருக்கு இணைப்புத் தையல் தேவைப்படுகிறது.[5][6][7] மகப்பேறியலில் பிரசவத்திற்குப் பிறகான நோயுற்ற தன்மை மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் விரக்திக்கு பெரினியல் அதிர்ச்சி முக்கியப் பங்களிக்கிறது. பிரசவ அதிர்ச்சியை இடுப்பெலும்பு தளம் ஈடு செய்துவிடுகிறது ஆனால் சராசரி வயதிற்கு மேற்பட்ட பல பெண்களில், இடுப்புத் தளத்தின் ஈடுசெய்யும் வழிமுறைகள் பலவீனமடையும் போது, சிக்கலை உண்டாக்கும். மேலும் வயதானபின் இது மிகுந்த சிக்கலை வெளிப்படுத்துகிறது.[8][9] விதைப்பை அல்லது யோனிக்கும், ஆசனவாய்க்கும் இடையிலான தூரம் அனோஜெனிடல் தூரம் என அழைக்கப்படுகிறது. இது ஒரு அளவீடாகும் மனிதர்களில் பெண்களை விட ஆண்களின் பெரினியம் இரு மடங்கு நீளமானது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.[10] குழந்தை பிறந்த மனிதர்களில் அனோஜெனிட்டல் தூரத்தை அளவிடுவது ஆண் பெண்ணியமயமாக்கலைத் தீர்மானிப்பதற்கும் அதன் மூலம் பிறந்த குழந்தை மற்றும் வயது வந்தோருக்கான இனப்பெருக்கக் கோளாறுகளை கணிப்பதற்கும் ஒரு ஊடுருவா முறையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.[11] சில சமயங்களில் பிரசவத்திற்குப் பிறகு அதிகப்படியாக பெரினியத்தில் தையலிடுவதன் மூலம் அது கோளாறு நிலையை அடைகிறது. இது யோனி இறுக்கத்தை அதிகரிக்கும் அல்லது உடலுறவின் போது வலியை ஏற்படுத்தும் என்றும் கூற்றுக்கள் உள்ளன.[12] சமூகம் மற்றும் கலாச்சாரம்மனித உடலின் இந்த பகுதிக்கு பொதுவாக "கறை" போன்ற பல அமெரிக்க வழக்குச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.[13] குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia