மெடிடேசன்ஸ்
மெடிடேசன்ஸ் (Meditations, வார்ப்புரு:Lang-grc-x-medieval, அதாவது "ஒருவரின் ஆத்ம விசாரணை") என்பது கி.பி 161 முதல் 180 வரை உரோமானிய பேரரசராக இருந்த மார்கஸ் ஆரேலியசின் எழுத்துக்களின் தொகுதியாகும். இது இவர் தன் மனத்தில் எழுந்த எண்ணங்களையெல்லாம் குறித்து வைத்த உறுதிப்பாட்டு மெய்யியல் பற்றிய கருத்துக்கள் ஆகும். மார்கஸ் ஆரேலியஸ் தனது சொந்த வழிகாட்டுதலுக்கும் சுய முன்னேற்றத்திற்கும் கொய்ன் கிரேக்க மொழியில் மெடிடேசன்ஸ் என்ற 12 நூல்களை எழுதினார் [1] .[2] கி.பி. 170 முதல் 180 வரை தொடர் போர்களைத் திட்டமிடுவதில் அதிக நேரம் செலவிட்ட சிர்மியம் நகரத்தில் இந்தப் படைப்பின் பெரும்பகுதி எழுதப்பட்டிருக்கலாம். இதில் சில இவர் பன்னோனியாவில் போர்த் தொடரின் போது அக்வின்கமில் தங்கி இருந்தபோது எழுதப்பட்டது. ஏனென்றால், கிரானோவா நதியில் (நவீனகால ஹ்ரோன்) குவாடிக்கு எதிராக இவர் தொடர் போர்களில் ஈடுபட்டபோது முதல் புத்தகம் எழுதப்பட்டதாகவும், இரண்டாவது புத்தகம் கார்னண்டமில் எழுதப்பட்டதாகவும் இதன் அகச்சான்றுகள் கூறுகின்றன. மார்கஸ் அரேலியஸ் இந்த எழுத்துக்களை வெளியிட வேண்டும் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை. இந்த படைப்புக்கு அதிகாரப்பூர்வ பெயர் இல்லை. எனவே இந்த தொகுப்பிற்கு பொதுவாக வைக்கப்பட்ட பல பெயர்களில் "மெடிடேசன்ஸ்" என்பதும் ஒன்றாகும். இதில் எழுதப்பட்டுள்ளவை ஒரு வாக்கியத்தில் தொடங்கி நீண்ட பத்திகள் வரை நீண்டு மாறுபடுகின்றன. இவை மேற்கோள்களின் வடிவத்தைக் கொண்டுள்ளன. கட்டமைப்பு மற்றும் கருப்பொருள்கள்![]() மெடிடேசன்ஸ் மார்கஸின் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களை விவரிக்கும் 12 புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் காலவரிசைப்படி இல்லை. இவற்றை தனக்காக அல்லாமல் வேறு யாருக்காகவும் இவரால் எழுதப்பட்டது அல்ல. தமிழ் மொழிபெயர்ப்புஇந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் இருந்து தேர்தெடுத்த பகுதிகளை பொ. திருகூடசுந்தரம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து இதய உணர்ச்சி என்ற பெயரில் நூலாக கொண்டுவந்தார். வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia