மெட்ராஸ்காரன்
மெட்ராஸ்காரன் (Madraskaaran) என்பது வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் எஸ். ஆர் புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் பி. ஜெகதீஷ் தயாரிப்பில் 2025இல் வெளிவந்த தமிழ் மொழி அதிரடி திரைப்படமாகும்.[2] இத்திரைப்படத்தில் ஷேன் நிகாம், கலையரசன், நிகாரிகா கொனிதேலா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.[3] மெட்ராஸ்காரன் திரைப்படம் 10 ஜனவரி 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது. மேலும் திரையரங்க வசூலில் வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[4] கதைபொறியாளராக இருந்து விவசாயியாக மாறிய சத்யா என்ற சத்யமூர்த்தி, கோவில்பட்டியில் தனது தந்தை மற்றும் தனது மனைவி மீராவுடன் வசிக்கிறார். அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களால் அவர் தாக்கப்படும்போது விஷயங்கள் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகின்றன. தனது எதிரியான சிங்கம் தன்னைக் கொல்ல சிலரை அனுப்பியிருப்பதை அவர் உணர்கிறார். சிங்கம் ஏன் அவரைக் கொல்ல விரும்புகிறார். சத்யா எப்படி தனது குடும்பத்தை சிங்கத்திடமிருந்து பாதுகாப்பார் என்பது கதையாக அமைகிறது. நடிகர்கள்
தயாரிப்புஇத்திரைப்படத்தை எஸ். ஆர் புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் பி. ஜெகதீஷ் தயாரித்துள்ளார்.[5] படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்க, பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு மற்றும் ஆர் வசந்தகுமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளனர்.[6] இந்த படம் மூலம் ஷேன் நிகாம் தமிழில் முன்னணி நடிகராக அறிமுகமாகிறார். கலையரசன் மற்றும் நிகாரிகா கொனிதேலா ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.[7][8] முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி பிப்ரவரி 2024 இல் தொடங்கியது.[9] படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் கொச்சி போன்ற பகுதிகளில் நடந்தது.[10] முழு படப்பிடிப்பும் ஜூன் 2024 இல் நிறைவடைந்தது.[11][12] இசைபடத்துக்கு சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.[13] முதல் தனிப்பாடலான "தாய் தக்க கல்யாணம்" 18 செப்டம்பர் 2024 அன்று வெளியிடப்பட்டது.[14] இரண்டாவது தனிப்பாடலான "காதல் சடுகுடு", ஏ. ஆர். ரகுமான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே (2000) என்ற படத்தில் இடம்பெற்ற காதல் சடுகுடு பாடலின் மறு பதிப்பாகும். பாடல் 7 டிசம்பர் 2024 அன்று வெளியிடப்பட்டது.[15][16] வெளியீட்டிற்கு முந்தைய இசை வெளியீட்டு நிகழ்வு 2025 ஜனவரி 6 அன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.[17] வெளியீடுமெட்ராஸ்காரன் திரைப்படம் பொங்கல் வார இறுதியில் 2025 ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[18] இத்திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.[19] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia