பிரசன்ன குமார்

பிரசன்ன எசு. குமார்
Prasanna S. Kumar
பிறப்புபிரசன்ன எசு. குமார்
12 மார்ச்சு 1987 (1987-03-12) (அகவை 38)
சேலம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
2006-தற்போது

பிரசன்ன எசு. குமார் (Prasanna Kumar) தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்த இந்திய ஒளிப்பதிவாளராவார்.[1][2] இவரது உறவினர் இயக்குநர் சசி ஆவார். தனது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப காலங்களில், பூ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் பி. ஜி. முத்தையாவுடன் இணைந்து பணியாற்றினார். அவருடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இவர் ஆர். ரத்னவேலுவுடன் டேவிட் (2013) ஹரிதாஸ் (2013) நம்பர் 1 (2014) ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார். இரவி கே. சந்திரனுடனும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். சசி இயக்கிய பிச்சைக்காரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[3]

திரைப்படவியல்

  • குறிப்பிடப்படாவிட்டால் அனைத்து படங்களும் தமிழில் இருக்கும்.
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2016 பிச்சைக்காரன் தமிழ்
2017 இவன் தந்திரன்
2018 உரு [4]
2019 பூமராங்
சிவப்பு மஞ்சள் பச்சை [1]
2020 சீறு
2022 நூறு கோடி வானவில்
2023 கசேதான் கடவுளடா
கிரிமினல்

வலைத்தொடர்கள்

ஆண்டு தலைப்பு ஒளிபரப்புத் தளம் மொழி குறிப்புகள்
2020 கண்ணாமூச்சி ஜீ5 தமிழ்
2022 விரல் நுனி (பருவம் 2)
பகிஸ்கரானா தெலுங்கு
2023 நியூசென்சு ஆகா.
2024 சட்னி சாம்பார் டிஸ்னி + ஹாட்ஸ்டார்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Rajendran, Gopinath (2019-09-18). "The story of cinematographer Prasanna Kumar capturing the bylanes of Chennai". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-05-01.
  2. "Prasanna S. Kumar : Biography, Age, Movies, Family, Photos, Latest News". Filmy Focus (in ஆங்கிலம்). Retrieved 2024-05-01.
  3. "'ஊட்டியில் படப்பிடிப்பு ஒளிப்பதிவாளர்களுக்கு சவால்' - பிரசன்ன குமார்". Hindu Tamil Thisai. 2024-08-04. Retrieved 2024-10-10.
  4. "Kalaiyarasan and Dhansika sign a thriller titled Uru". Behindwoods. 2016-11-16. Retrieved 2024-05-01.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya