மெண்டோசைட்டு
மெண்டோசைட்டு (Mendozite) என்பது NaAl(SO4)2·11H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். படிகாரம் வரிசை தொடர்களில் ஒன்றான சல்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. சோடியம் அலுமினியம் சல்பேட்டின் (சோடா ஆலம்) நீரேற்றப்பட்ட வடிவமாக மெண்டோசைட்டு அறியப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் மெண்டோசைட்டு கனிமத்தை Mz[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. 1868 ஆம் ஆண்டு மேற்கு அர்கெந்தினாவில் கண்டுபிடிக்கப்பட்டது, சான் இயூவான் அருகே மெண்டோசைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. சரியான இடம் அறியப்படாமல் ஆனால் "சான் இய்யுவானின் மெண்டோசாவிற்கு அருகில் கிடைத்ததாக பின்னாளில் விவரிக்கப்பட்டது. மெண்டோசா நகரத்தில் கிடைத்ததால் கனிமத்திற்கும் மெண்டோசைட்டு என பெயரிடப்பட்டது. களிமண் முன்னிலையில் சல்பைடு தாதுக்களின் ஆக்சிசனேற்றமடையும் கனிம ஆவியாக்கிகளில் இக்கனிமம் காணப்படுகிறது.[2] தண்ணீரில் மிகவும் நன்றாகக் கரையும். எனவே வறண்ட பகுதிகளில் மட்டுமே இதை காண முடியும். மிகவும் வறண்ட காலநிலையில் அறுநீரேற்றான தம்ருகைட்டு கனிமமாக மாறுகிறது.[3] மேற்கோள்கள்
நூற் பட்டியல்
|
Portal di Ensiklopedia Dunia