சோடியம் அலுமினியம் சல்பேட்டு
சோடியம் அலுமினியம் சல்பேட்டு (Sodium aluminium sulfate) என்பது NaAl(SO4)2·12H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சில சமயங்களில் இவ்வாய்ப்பாடு Na2SO4·Al2(SO4)3·24H2O) என்றும் எழுதப்படுவதுண்டு. வெள்ளை நிறத்துடன் காணப்படும் இச்சேர்மத்தை சோடா படிகாரம் அல்லது சோடியப் படிகாரம் என்றும் அழைப்பர். உணவுப் பொருட்களின் (E521|ஐ521) அமிலத்தன்மை சீராக்கியாக இச்சேர்மம் பயன்படுகிறது. குறிப்பாக சமையல் சோடா தயாரிப்பில் இச்சேர்மம் பெரிதும் பயன்படுகிறது. தயாரிப்பும் பயனும்சோடியம் சல்பேட்டையும் அலுமினியம் சல்பேட்டையும் சேர்ப்பதால் சோடியம் அலுமினியம் சல்பேட்டு உருவாகிறது. 2003 ஆம் ஆண்டில் ஒரு ஆண்டிற்கு 3000 டன்கள் அளவுக்கு தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில், இதை சோடியம் பைகார்பனேட்டு மற்றும் ஒரு கால்சியம் பாசுபேட் ஆகியனவற்றுடன் சேர்த்து இரட்டை வினை புரிகின்ற சமையல் சோடாவாக வீடுகளுக்காகத் தயாரிக்கிறார்கள்[1]. மரபார்ந்த கனசதுர படிகார அமைப்பில் பன்னிரு நீரேற்று காணப்படுகிறது. கனிமவியலில் இதைதான் படிகாரச் சோடியம் என்கிறார்கள்[2][3] . இதுதவிர மேலும் இரண்டு அரிய கனிம வடிவங்கள் அறியப்படுகின்றன. : மெண்டோசைட்டு [4]( பதினொன்று நீரேற்று) மற்றொன்று தமாருகைட்டு [5](அறுநீரேற்று) என்பன அவையிரண்டாகும். பொதுவான நிறம் ஊன்றியாக எமடாக்சிலின் கரைசல்கள் தயாரிப்பில் இது பயன்படுத்தப்படுகிறது. இக்கரைசல்கள் நுண்திசு நோயியலில் செல் உட்கருக்களுக்கு நிறமேற்ற பயன்படுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia