மெல்ல திறந்தது கதவு என்பது 2 நவம்பர் 2015 முதல் 27 அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[2][3][4] இந்த தொடரை 'பிரம்ம ஜி. தேவ்' என்பவர் இயக்க, வெங்கட் ரங்கநாதன், லிஷா, காயத்ரி யுவராஜ், அனு சுலஷ், அஸ்வந்த் அசோக்குமார், ஸ்ரீது கிருஷ்ணன், சந்தோஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.
தொடரின் பருவங்கள்
பருவங்கள்
அத்தியாயம்
ஒளிபரப்பு
நேரம்
முதல் ஒளிபரப்பு
இறுதி ஒளிபரப்பு
1
315
2 நவம்பர் 2015 (2015-11-02)
20 சனவரி 2017 (2017-01-20)
திங்கள் - வெள்ளி 20:00 & 22:00 19:30 22:00
2
236
23 சனவரி 2017 (2017-01-23)
27 அக்டோபர் 2017 (2017-10-27)
திங்கள் - வெள்ளி 19:00 13:00 12:00
பருவங்கள்
பருவம் 1
இந்த தொடரின் முதல் பருவம் 2 நவம்பர் 2015 முதல் 20 சனவரி 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி, 315 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் கதை கண் தெரியாத சந்தோஷ் மற்றும் செல்வி இருவரும் காதலித்து எப்படி திருமணம் செய்துகொள்கின்றனர் என்பதை விளக்குகின்றது.
இந்த தொடரின் இரண்டாம் பருவம் 'மெல்லத் திறந்தது கதவு மின்மினி பூக்களின் கதை' என்ற பெயரில் 23 சனவரி முதல் 27 அக்டோபர் 2017 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி, 236 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[5]