மேகா (2014 திரைப்படம்)
மேகா (Megha) 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். திரில்லர் வகையை சேர்ந்த இப்படத்தை இயக்கியவர் கார்த்திக் ரிஷி.[1] ஆல்பர்ட் ஜேம்ஸ் மற்றும் S. செல்வக்குமார் கூட்டாக தயாரித்த இப்படத்தில் அஸ்வின் ககுமனு, சிருஷ்டி டங்கே மற்றும் அங்கனா ராய் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜெயப்பிரகாசு, ரவி பிரகாசு, ஆடுகளம் நரேன், மீரா, நித்யா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆகஸ்ட் 29, 2014 அன்று வெளிவந்தது.[3] நடிகர்கள்
இசைஇளையராஜா பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்தார். இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றன. அவற்றில் ஒன்று அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் இடம்பெற்ற "புத்தம் புது காலை" என்ற பாடலாகும். "புத்தம் புது காலை" பாடல் மீண்டும் பதிவு செய்யப்பட்டது. மகேந்திரன் இயக்கத்தில் மருதாணி திரைப்படத்திற்கு உருவாவதாக இருந்தது. அத்திரைப்படம் தயாரிக்கப்படாததால், இப்பாடல் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் எல்பி பதிவுகளில் மட்டுமே உள்ளது. அப்படக்காட்சியில் இப்பாடல் இல்லை. இப்பாடலை இளையராஜா மீண்டும் 2014 இல் இந்தத் திரைப்படத்தில் பயன்படுத்தினார்.[4][5] இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பிடித்திருந்ததால் இதில் பணியாற்ற சம்மதித்ததாக இளையராஜா தெரிவித்தார்.[6]
சான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia