அலைகள் ஓய்வதில்லை
அலைகள் ஓய்வதில்லை (Alaigal Oivathillai)1981 ஆம் ஆண்டு சூலை மாதம் 18 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக், ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். நடிகர்கள்
பாடல்கள்இத்திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசையை ஆகியவற்றிற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். "ஆயிரம் தாமரை", "விழியில் விழுந்து" ஆகிய பாடல்களை வைரமுத்து இயற்றினார். "புத்தம் புது காலை", "வாடி என் கப்பா கிழங்கே" ஆகிய பாடல்களை கங்கை அமரன் இயற்றினர். காதல் ஓவியம் என்ற பாடலை பஞ்சு அருணாசலம் இயற்றினார். மீதமுள்ள சிறிய பாடல்களை இளையராஜாவே இயற்றி இசையமைத்தார். படத்தின் பாடல்கள் இன்று வரை இளையராஜாவின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கிறது. "புத்தம் புது காலை" பாடல் மீண்டும் பதிவு செய்யப்பட்டது. மகேந்திரன் இயக்கத்தில் மருதாணி திரைப்படத்திற்கு உருவாவதாக இருந்தது. அத்திரைப்படம் தயாரிக்கப்படாததால், இப்பாடல் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் எல்பி பதிவுகளில் மட்டுமே உள்ளது. இப்பாடலை இளையராஜா மீண்டும் 2014 இல் மேகா திரைப்படத்தில் பயன்படுத்தினார்.[2][3]
விருதுகள்
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia