மேற்கத்திய (வகை)

கவ்பாய்ஸ் மனிதனின் தோற்றம்.

மேற்கத்திய (Western) என்பது 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு அமெரிக்காவில் "பழைய மேற்கு" பாணியில் அமைக்கப்பட்ட புனைகதை வகையாகும். இதன் கதைகள் பொதுவாக ஒரு நாடோடி கவ்பாய் அல்லது சுழல் கைத்துப்பாக்கி மற்றும் மரைகுழல் துப்பாக்கி ஏந்திய வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது.

கவ்பாய்ஸ் மனிதர்கள் துப்பாக்கி ஏந்தியவர்களாக பொதுவாக தொப்பி, கழுத்துப்பட்டை பந்தன், உள்ளாடைகள், ஸ்பர்ஸ், கவ்பாய் பூட்ஸ் போன்றவை அணிவார்கள். அமெரிக்கா , ஸ்பானியா, மெக்ஸிகோ போன்ற நாட்டை பூர்வீகமாக கொண்ட இவர்கள் கொள்ளையர், வேட்டைக்கார், சட்டவிரோதமாக சூதாட்டக்காரர்களாகவும், வீரர்கள் (குறிப்பாக எருமை வீரர் போன்ற குதிரைப்படை வீரர்), மற்றும் குடியேறியவர்கள் (விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் நகர மக்கள்) போன்று வாழ்த்து வருகின்றனர். மேற்கத்தியர்கள் பெரும்பாலும் வனப்பகுதியில் கடுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.[1]

கதை அமைப்பு

  • காட்டு எல்லையில் ஒரு புகையிரத பாதை அல்லது தந்தி பாதை அமைத்தல்.
  • பண்ணையாளர்கள் அல்லது பெரிய நில உரிமையாளர் தங்கள் குடும்ப பண்ணையை பாதுகாக்கிறார்கள்.
  • பழிவாங்கும் கதைகள், அநீதி இழைக்கப்பட்ட ஒருவரால் துரத்தப்படுவதையும் பின்தொடர்வதையும் குறிக்கிறது.
  • குதிரைப்படை வீரர்கள் பூர்வீக அமெரிக்கர்களுடன் போராடுவது பற்றிய கதைகள்.
  • சட்டவிரோத கும்பல் சதி.

மேற்கோள்கள்

  1. Cowie, Peter (2004). John Ford and the American West. New York: Harry Abrams Inc. ISBN 978-0-8109-4976-8.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya