மைக்கேல்பட்டி ராஜா
மைக்கேல்பட்டி ராஜா (Michaelpatty Raja) 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும்.[1] பிரான்சிஸ். எஸ் இயக்கிய இப்படத்தை ஸ்பெல்பவுண்ட் பிலிம்ஸ் இன்க் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் நிகேஷ் ராம் , பெர்லீன் பெசானியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராஜேந்திரன், கோவை சரளா , தம்பி ராமையா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 19 மார்ச் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[2][3] நடிப்பு
தயாரிப்புஇந்த படம் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரபு தாகூ என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டது. பிரான்சிஸ் அறிமுக இயக்குனராகவும், நிகேஷ் ராம் முன்னணி நடிகராகவும் அறிவிக்கப்பட்டனர். 2012இல் நடந்த உண்மையான நிகழ்வுகளால் படம் ஓரளவு ஈர்க்கப்பட்டது.[4] மைக்கேல்பட்டி ராஜா என்ற தலைப்பு இறுதி செய்யப்படுவதற்கு முன்பு "மைக்கேல்பட்டி ராசாவும் துபாய் ரோஸாவும்" என பெயரிடப்பட்டது. ஏப்ரல் 2017 இல், தயாரிப்பாளர்கள் துருக்கிய நடிகை பெர்காசர் கோரல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தனர். ஆனால் இறுதியில் அவர் நடிக்கவில்லை.[5][6] பின்னர் அவருக்கு பதிலாக இந்திய நடிகை பெர்லீன் பெசானியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[7] இந்தப் படம் பெரும்பாலும் துபாயில் படமாக்கப்பட்டது. துபாயை தளமாகக் கொண்ட பல அரபு, பாக்கித்தான் நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[8] வெளியீடும் வரவேற்பும்இந்த படம் 19 மார்ச் 2021 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[9] மாலை மலர் செய்தித்தாளின் விமர்சகர் படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்தார்.[10] 'அர முரசு' செய்தி தளத்தின் விமர்சகர் முரளி படத்தைப் பற்றி "வேடிக்கை" என்று குறிப்பிட்டார்.[11] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia