மைக்கேல் ரூக்கர்
மைக்கேல் ரூக்கர் (ஆங்கிலம்: Michael Rooker) (பிறப்பு: ஏப்ரல் 6, 1955) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டு முதல் எயிட் மென் அவுட் (1988), சீ ஆப் லவ் (1989), டேஸ் ஆப் தண்டர் (1990), மள்ளரேட்ஸ் (1995) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி[1] மற்றும் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2[2] (2017) போன்ற திரைப்படங்களில் 'யோண்டு' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்ப கால வாழ்க்கைமைக்கேல் ரூக்கர் 6 ஏப்ரல் 1955 ஆம் ஆண்டு அலபாமாவில் உள்ள ஜாஸ்பரில் பிறந்தார். இவருக்கு ஒன்பது சகோதர சகோதரிகள் உள்ளனர். இவர் தனது 13 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர், மேலும் அவர் தனது தாய் மற்றும் உடன்பிறப்புகளுடன் இல்லினாய்ஸின் சிகாகோவுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் வெல்ஸ் கம்யூனிட்டி அகாடமி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் மற்றும் டீபால் பல்கலைக்கழகத்தில் உள்ள குட்மேன் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் படித்தார்.[3][4][5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia