கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி
கோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி (ஆங்கிலம்: Guardians of the galaxy) என்பது 2014 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸின் 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' என்ற வரைகதையை அடிப்படையாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்தது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் பத்தாவது படமாகும். கேவின் பேகே தயாரிப்பில் ஜேம்ஸ் கன்[4] எழுதி மற்றும் இயக்கியுள்ளார், மற்றும் நிக்கோல் பெர்ல்மேன், ஜேம்ஸ்கன் கதை எழுதியுள்ளார்கள். இந்த திரைபடத்தில் கிறிஸ் பிராட், ஜோ சல்டனா, டேவ் பாடிஸ்டா, வின் டீசல், பிராட்லி கூப்பர், லீ பேஸ், மைக்கேல் ரூக்கர், கரேன் கில்லன், ஜான் சி.ரெய்லி, கிளன் குளோஸ், பெனிசியோ டெல் டோரோ, திஜிமோன் கவுன்சோ போன்ற பலர் நடித்துள்ளார்கள். கோர்டியன்ஸ் ஒப் தி கேலக்ஸி என்ற படம் 21 ஜூலை 2014 அன்று ஹாலிவுட்டில் டால்பி திரையரங்கத்தில் திரையிடப்பட்டது, மேலும் இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகி, விமர்சன மற்றும் வணிக ரீதியாக வெற்றியடைந்தது. இது உலகளவில் 772.8 மில்லியன் டாலர்களை வசூலித்து. 2014 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மீநாயகன் படமாகவும், 2014 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மூன்றாவது படமாகும். படத்தின் திரைக்கதை, இயக்கம், நடிப்பு, நகைச்சுவை, ஒலிப்பதிவு, காட்சி விளைவுகள் மற்றும் அதிரடி காட்சிகளுக்காக பாராட்டப்பட்டது. மற்றும் 87 வது அகாடமி விருதுகளில், சிறந்த திரை வண்ணம், சிறந்த ஒப்பனை போன்ற விருதுகளை வென்றுள்ளது. இதன் இரண்டாம் பாகம் கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு வெளியானது. மற்றும் இதன் மூன்றாம் பாகம் 2022 ஆம் ஆண்டில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர்கள்![]()
வெளியீடுஇந்த திரைப்படம் 3D மற்றும் ஐமேக்ஸ் 3D.ல், ஆகஸ்ட் 1ம் திகதி, 2014 அன்று வெளியடப்பட்டது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவில் வெளியானது. தொடர்ச்சியான தொடர்கள்கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017)மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia