மைதிலி பிரகாஷ்மைதிலி பிரகாஷ் (Mythili Prakash) [1] இவர் ஓர் அமெரிக்க நடனக் கலைஞரும், தென்னிந்தியாவில் தோன்றிய பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் நிபுணத்துவம் பெற்றவருமாவார். [2] பரதநாட்டியத்தின் உலகின் முன்னணி இளம் நிபுணர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட இவரது பாரம்பரிய, கண்டுபிடிப்பு அணுகுமுறை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் அர்த்தமுள்ள ஒரு விதிவிலக்கான பாணியை உருவாக்க நடனத்தின் அசைவு, இசை மற்றும் வெளிப்படையான நாடகத்தன்மையை புதுப்பிக்கிறது. [3] ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விஒரு குழந்தை அதிசயமான மைதிலி தனது தனது 8ஆவது வயதிலேயே பரதநாட்டிய கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், உலகெங்கிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதிப்புமிக்க இடங்கள் மற்றும் விழாக்களில் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். மைதிலிக்கு அவரது தாயார், பரதநாட்டியத்தின் நிபுணர் விஜி பிரகாஷ் பயிற்சியளித்தார். [4] மேலும் இந்தியாவில் இருந்து பல புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் இப்போது புகழ்பெற்ற நடனக் கலைஞர் மாளவிகா சருக்கையின் வழிகாட்டுதலில் உள்ளார். [5] 2004ஆம் ஆண்டில், மைதிலி பிரகாஷ் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகதிலிருந்து பொதுமக்கள் தொடர்பில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும், பரதநாட்டியத்திற்கு முழுநேரமும் தன்னை அர்பணித்துக் கொண்டார். [6] தொழில்மைதிலி, தனது நேரத்தை லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சென்னை இடையே பிரித்துக் கொள்கிறார். சென்னை, இசை விழாக் காலங்களில் வழக்கமான கலைஞரான மைதிலி, தி மியூசிக் அகாடமி, கிருட்டிண கானசபா, நாரத கானசபா, சென்னை,கலாசேத்திரா, மும்பை சிறீசண்முகானந்தா சபா, புது தில்லி இந்திய சர்வதேச மையம் மற்றும் பெங்களூர், சௌடையா நினைவரங்கம் போன்ற முக்கிய இடங்களில் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். மைதிலி ஐக்கிய இராச்சியம், பிரான்சு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் தி லோரி, மான்செஸ்டர், பாரிசின் குய்மெட் அருங்காட்சியகம், மற்றும் சிங்கப்பூரின் விரிகுடாவில் உள்ள எஸ்ப்ளேனேட் அரங்கங்கள் போன்ற மதிப்புமிக்க கலை அரங்குகளிலும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். நியூயார்க்கின் லிங்கன் மையம், லாஸ் ஏஞ்சலஸ் சக்தி நாடக நிறுவனத்தின் முன்னணி நடனக் கலைஞராகவும்,ஹியூஸ்டன் வோர்டாம் மையம், மற்றும் நியூ செர்சி, நியூ செர்சி நிகழ்த்து கலை மையம் போன்றவற்றிலும் தனது பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். விருதுகள் மற்றும் கௌரவங்கள்2009 சனவரியில், இவர் அமெரிக்காவின் தேசிய ஒளிபரப்பு நிறுவனத்தின் "சூப்பர்ஸ்டார்ஸ் ஆஃப் டான்ஸ்" என்ற நிகழ்சியில் இடம்பெற்றார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia