குய்மெட் அருங்காட்சியகம் (Guimet Museum), பிரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் உள்ளது. பிரான்சு நாட்டின் காலனிய நாடுகளில், குறிப்பாக ஆசியாவில் கிடைத்த தொல்லியல் கலைப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[1][2]
வரலாறு
குய்மெட் அருங்காட்சியக நூலகத்தின் மேற்கூரைஅருங்காட்சியகத்தின் உட்புறக் காட்சி
பிரான்சு நாட்டின் தொழிலபதிபர் எமிலி எட்டினே குய்மெட் என்பவரால், குய்மெட் அருங்காட்சியகம் 1879ல் முதலில் லியோன் நகரத்தில் நிறுவப்பட்டது. [3] பின்னர் இவ்வருங்காட்சியகம் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரத்திற்கு 1889ல் மாற்றப்பட்டது.[4]
1876ல் பிரான்சு நாட்டு அரசால் எமிலி எட்டினே குய்மெட், பிரான்சு நாட்டின் காலனியாதிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குய்மெட், தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா[5] மற்றும் தூரகிழக்கு ஆசிய நாடுகளான ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பயணித்து, அந்தந்த நாடுகளில் கிடைத்த தொல்லியல் கலைப்பொருட்களை சேகரித்து, அவைகளை தனது குய்மெட் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார.
↑National museum Arts asiatiques – Guimet, Marie-Catherine Rey et al. Paris: Éditions de la Réunion des Musées nationaux, 2001, translation by John Adamson, பன்னாட்டுத் தரப்புத்தக எண்2711838978, Chronology, p. 6.
↑Patrick Howlett-Martin, « Où ira le buste de Néfertiti ? », Le Monde diplomatique, no 700, juillet 2012, p. 27.