மொரிசியசின் தேசிய சட்டமன்றம்
மொரிசியசு நாடாளுமன்றம் ஓரவை முறைமையைக் கொண்டது. அந்த ஓரவை தேசிய சட்டமன்றம் ஆகும். இது எழுபது உறுப்பினர்களை கொண்டது. இவர்களில் 62 உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுப்பர். எட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றுக்கு மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுவோர் நான்கு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பர். மொரிசியசு தீவை 20 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் மூவர் தேர்ந்தெடுக்கப்படுவர். ரொட்ரிக்சு தீவு முழுவதும் ஒரு தொகுதியாக கணக்கிடப்படும். இதில் இருந்து இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். பொதுத் தேர்தல் முடிந்ததும், அதிக பட்சமாக எட்டு பேரை தேர்தல் ஆணையம் நியமிக்கும். பாராளுமன்றத்தில் அதிக இடங்களைப் பிடிக்கும் கட்சியோ, கட்சியின் கூட்டணியோ ஆட்சி அமைக்கும். அந்த கட்சியின் தலைவரே பிரதமர் ஆவார். இவர் சட்டமன்றத்தில் சிலரை தேர்ந்தெடுத்து அமைச்சர்களாக நியமிப்பார். மேலும் பார்க்கஇணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia