மொழிக் கல்விமொழிக் கல்வி (Language education) இரண்டாவது அல்லது அந்நிய மொழியைக் கற்பிக்கும் செயல்முறை மற்றும் நடைமுறையாகும். முதன்மையாக பயன்பாட்டு மொழியியலின் ஒரு கிளையாகும், ஆனால் இது ஒரு பல்துறைமைத் துறையாக இருக்கலாம். [1] [2] மொழிக் கல்விக்கு நான்கு முக்கிய கற்றல் பிரிவுகள் உள்ளன: தகவல்தொடர்பு திறன்கள், திறமைகள், குறுக்குக் கலாச்சார அனுபவங்கள் மற்றும் பல்துறை கல்வியறிவுகள்.[3] தேவைஅதிகரித்து வரும் உலகமயமாக்கல், பல மொழிகளில் தொடர்பு கொள்ளக்கூடிய பணியாளர்களின் தேவையை உருவாக்கியுள்ளது. வர்த்தகம், சுற்றுலா, இராஜதந்திரம், தொழில்நுட்பம், ஊடகம், மொழிபெயர்ப்பு, விளக்கம் மற்றும் அறிவியல் போன்ற பகுதிகளில் பொதுவான மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரியா (கிம் யோங்-சியோ, 2009), ஜப்பான் (குபோடா, 1998) மற்றும் சீனா (கிர்க்பாட்ரிக் & ஜிச்சாங், 2002) போன்ற பல நாடுகள் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் ஒரு அந்நிய மொழியையாவது கற்பிக்கும் வகையில் கல்விக் கொள்கைகளை உருவாக்குகின்றன. இருப்பினும், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, பாக்கித்தான் மற்றும் பிலிப்பீன்சு போன்ற சில நாடுகள் தங்கள் அரசாங்கங்களில் இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியைப் பயன்படுத்துகின்றன. GAO (2010) படி, சீனா சமீபத்தில் வெளிநாட்டு மொழி கற்றலுக்கு, குறிப்பாக ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ![]() மொழிக் கல்வி ஒரு பொதுப் பள்ளிப் பாடமாக அல்லது சிறப்பு மொழிப் பள்ளியில் நடைபெறலாம். மொழிகளைக் கற்பிக்க பல முறைகள் உள்ளன. சில ஒப்பீட்டளவில் தோல்வி அடைந்த போதிலும் மற்றவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இணையவழி மற்றும் சுய படிப்புகள்சுயமாகப் படிப்பதற்கு நூற்றுக்கணக்கான மொழிகள் உள்ளன. பல பதிப்பகங்கள், பல்வேறு வகையான செலவினங்களில் மற்றும் பல்வேறு முறைகளில் கற்க வழிவகைகள் உள்ளன.[4] ஒலிப் பதிவுகள் மற்றும் புத்தகங்கள்தாய்மொழி பேசுபவர்களின் ஒலிப் பதிவினைப் பயன்படுத்தி கற்பதன் மூலம் ஒலியழுத்தம் குறித்து சரியாக கற்க வழிவகை செய்யப்படுகிறது.[5] சில பதிவுகள் கற்பவர் பேசுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது.மற்ற சிலவகைகள் இந்த வசதியினை வழங்குவதில்லை.[6] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia