மோனா ஹென்ஸ்மேன்
மோனா ஹென்ஸ்மேன் (பிறப்பு: மோனா மிட்டர், 25 ஆகத்து 1899 - 5 திசம்பர் 1991), என்பவர் ஒரு இந்திய கல்வியாளர், பெண்ணியவாதி, அரசியல்வாதி ஆவார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்தியப் நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு தமிழ்நாடிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய நாடாளுமன்றத்தில் முதல் பெண் கொறடா இவர் ஆவார். இவர் 1953 முதல் 1960 வரை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் முதல்வராக இருந்தார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விமோனா மிட்டர் 1899 ஆம் ஆண்டில் பரம்பூரில் ஆர். கே. மிட்டர் மற்றும் பெனோடினி போஸ் மிட்டரின் மகளாகப் பிறந்தார். இவரது தந்தை ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் இராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தவர்.[1] இவர் இந்தியாவில் உதகமண்டலத்தில் உள்ள செயின்ட் ஹில்டாவில் பயின்றார், பின்னர் இவர் பெட்ஃபோர்ட் மகளிர் பள்ளியிலும் லண்டனில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் கல்லூரியிலும் தனது கல்வியைத் தொடர்ந்தார். இவர் மொழி மற்றும் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[2] தொழில்ஹென்ஸ்மேன் தனது பணி வாழ்க்கையின் பெரும்பகுதியை உயர் கல்வித் துறையில் கழித்தார். இவர் இளம் பெண்ணாக இருந்தபோதே லாகூரில் உள்ள கின்னெய்ட் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். 1924 இல், சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு பேராசிரியரானார். 1930 ஆம் ஆண்டில், ஹென்ஸ்மேன் மதராஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய செனட் உறுப்பினராக பணியாற்றினார். எதிராஜ் மகளிர் கல்லூரியில் சுபூர் பார்த்தசாரதிக்குப் அடுத்து இரண்டாவது முதல்வராக 1953 முதல் 1960 வரை இவர் இருந்தார்.[3] 1962 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மகளிர் கூட்டமைப்பின் இரண்டாண்டு மாநாட்டில், இந்திய பல்கலைக்கழக மகளிர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராக கலந்து கொண்டார். ஹென்ஸ்மேன் குறிப்பாக கிறிஸ்தவ பெண்களுக்கு ஆதரவளிப்பதில் அக்கறை காட்டினார். 1929 ஆம் ஆண்டில் இவர் சென்னையில் இளம் கிறிஸ்தவ பெண்கள் சங்கத்தின் முதல் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டார். 1937 இல், இவர் உலக இளம் கிறிஸ்தவ பெண்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார்.[2] கல்கத்தா (1936) மற்றும் எடின்பர்க் (1938) ஆகியவற்றில் நடந்த சர்வதேச பெண்கள் கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொண்டார். இவர் திட்டக் குழுக்களில் ஒன்றை வழிநடத்தினார் மேலும் 1938 இல் தம்பரத்தில் நடந்த உலக சமயப் பரப்பாளர் மாநாட்டிற்கு பிரதிநிதியாக சென்றார். ஹென்ஸ்மேன் மதராசில் சமாதான நீதவானாக இருந்தார் மேலும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார், மாநிலங்களவையில் மதராஸ் மாநிலத்தின் சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் சர்பில் மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டார்.[4][5][6][7][8][9] இவர் இந்திய நாடாளுமன்றத்தில் முதல் பெண் கொறடா ஆவார். இவர் ஐக்கிய நாடுகள் அவையில் இந்திய பிரதிநிதியாக சென்றார். 1937 ஆம் ஆண்டில், ஹென்ஸ்மேன் பிரித்தானிய பேரரசின் ஆணை (MBE) உறுப்பினராக்கப்பட்டார். தனிப்பட்ட வாழ்க்கைமோனா மிட்டர் யாழ்ப்பாண தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஹென்றி எஸ். ஹென்ஸ்மானை மணந்தார். இவர்களுக்கு ராஜ்குமார், பெனோடினி என்ற இரண்டு பிள்ளைகள் இருந்தனர். மோனா மிட்டர் 1991 இல், 92 வயதில், சென்னையில் இறந்தார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia