மோனோநைட்ரசன் மோனோசல்பைடு
மோனோநைட்ரசன் மோனோசல்பைடு (Mononitrogen monosulfide) என்பது SN என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிமச் சேர்மம் ஆகும். இதை நைட்ரசன் மோனோசல்பைடு என்ற பெயராலும் அழைப்பர். NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட தனி உறுப்பான நைட்ரிக் ஆக்சைடின் கந்தகன் ஒத்த வரிசைச் சேர்மமாக இது கருதப்படுகிறது. நைட்ரசன் மற்றும் கந்தகச் சேர்மங்களின் கலவை வழியாக மின்சாரத்தைச் செலுத்தியும், நைட்ரசன் உடன் கந்தக ஆவியை வினைபுரியச் செய்தும் மோனோநைட்ரசன் மோனோசல்பைடைத் தயாரிக்கலாம். இச்சேர்மத்தின் இணைதிறன் எலக்ட்ரான்கள் நைட்ரிக் ஆக்சைடின் [1] இணைதிறன் எலக்ட்ரான்களுடன் ஒத்திருக்கின்றன. விண்வெளிக்குப் புறவெளியில் இச்சேர்மம் முதன்முதலில் Sgr B2 என்ற இராட்சத மூலக்கூறு மேகத்தில் கண்டறியப்பட்டது. அடுத்தடுத்து குளிர்ந்த அடர் மேகங்களிலும் வால்வெள்ளிகளின் உட்கரு உறையிலும் இச்சேர்மம் கண்டறியப்பட்டது [2]. ஒத்ததிர்வுக் கட்டமைப்பில் மோனோநைட்ரசன் மோனோசல்பைடு காணப்படுகிறது. இதில் பிணைப்பு வரிசை ஒன்றை கொண்டுள்ள ஓர் இனம் மின்சுமை பிரிப்பை முக்கியமான பயன்பாடாகக் கொண்டுள்ளது.. இதையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia