மோவாய்மோவாய் (Moai) /ˈmoʊ.aɪ/ (ⓘ), என்பன சிலியின் ஈஸ்டர் தீவுத் பொலினீசியாவில் பாறையில் செதுக்கப்பட்ட 1250க்கும் 1500க்கும் இடைப்பட்ட கால ஒன்றைக் கல் மனித உருவங்கள்.[1] கிட்டத்தட்ட அரைவாசி பிரதாக கற்சுரங்க பகுதி ரனோ ரரக்குவில் காணப்பட, நூற்றுக்கணக்கானவை ஈஸ்டர் தீவின் சுற்றளவைச் சுற்றி அகு மேடையில் வைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய எல்லா மோவாய்களும் உடலைவிட ஐந்திற்கு மூன்று என்ற அளவு தலைகளை உடையன. மோவாய்க்கள் தெய்வத்தன்மையுடைய மூதாதையர்களின் முக்கியமான உயிர்வாழும் முகங்களாகும்.[2] இவற்றின் உருவாக்கமும் 887 சிலைகளை ஓர் இடத்திலிருந்து இன்னுமோர் இடத்திற்கு கொண்டு சென்றதும்[3] குறிப்பிடத்தக்க படைப்பாற்றலும் அருந்திறனுமென கருதப்படுகின்றன.[4] பரோ என அழைக்கப்படும் உயரமான மோவாய் கிட்டத்தட்ட 10 மீட்டர்கள் (33 அடி) உயரமும் 82 டன் எடையும் உள்ளது[5] அதிக எடைகூடிய, குள்ளமான அகு டொங்காரிகி எனும் இடத்திலுள்ள மோவாய் 86 டன் எடையுள்ளது. முடிவடையாத மோவாய் ஒன்றுள்ளது. அது முடிவுற்றிருந்தால் அது ஏறக்குறைய 21 மீட்டர்கள் (69 அடி) உயரமும் கிட்டத்தட்ட 270 டன் எடையும் உடையதாக இருந்திருக்கும். குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia