மௌன ராகம் 2
மௌன ராகம் 2 என்பது 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2][3] இது மௌன ராகம் (2017-2020) என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும்.[4] இந்த தொடரை 'தாய் செல்வம்' என்பவர் இயக்க, ரவீனா,[5] சுருதி கார்த்திக், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித், அனுஸ்ரீ போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 17 மார்ச்சு 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு, 517 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. நேர அட்டவணைஇந்த தொடர் முதலில் ஜனவரி 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 5 என்ற நிகழ்ச்சிக்காக இந்த தொடர் 4 அக்டோபர் 2021 முதல் இரவு 7 மணிக்கு மாற்றப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia