மௌன ராகம் (தொலைக்காட்சித் தொடர்)
மௌன ராகம் என்பது விஜய் தொலைக்காட்சியில் 24 ஏப்ரல் 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் வங்காளி மொழி தொடரான 'போட்டால் குமார் கான்வலா' எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும். இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்க, கிருத்திகா, ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்துள்ளார்கள். மற்றும் பிரபல இசை அமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் இந்தத் தொடருக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.[1][2][3][4][5] கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆகஸ்ட் 8, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, நவம்பர் 19 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அன்று 863 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் 1 பெப்ரவரி 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகின்றது. கதைச்சுருக்கம்அழகிய குரல் வளமும் மனமும் கொண்டவள் சக்தி என்னும் ஏழு வயது சிறுமி. அவளது அம்மா மற்றும் தாய் மாமனின் பாதுகாப்பில் வளரும் சக்திக்கு ஒரு பெரிய கவலை உண்டு. தனது தந்தை யார் என்று தெரியாமல் இருப்பதால் பல அவமானங்களை சந்திக்கிறாள். எந்த ஒரு இசைக்கும் ஏற்ப பாடும் திறமையைக் கொண்ட சக்தி பிறகு ஒரு கட்டத்தில் தனது தாயிடமிருந்து தான் ஒரு பாடகரின் குழந்தை என்பதை அறிகிறாள். திடீரென சக்தியின் தாய் மல்லிகா இறக்க, அத்தையின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை வருகிறாள் அங்கு தனது தந்தை யாரென தெரிந்தும் சொல்லமுடியாத சுழ்நியில் சக்தி தள்ளப்படுகிறாள். தான் ஒரு பெண் குழந்தை இல்லை ஒரு ஆண் குழந்தை என சொல்லி வேலன் என பெயர் மாற்றி கொண்டு தனது தந்தையுடன் பெரியப்பாவின் அரவணைப்பில் வாழ்கிறாள். இவன் மீது பாசம் கொள்ளும் கார்த்தி இதை விரும்பாத கார்த்திக்கின் மனைவி கதாமப்ரி வேலணை பிரிக்க பல திட்டம் போடுகின்றார். வேலன் பற்றிய உண்மைகள் தெரிய வந்தாள் இவர்களின் வாழ்வில் என்ன மாற்றம் நடக்கப்போகிறது என்பதை ஒரு இசை கலந்த கதை களத்துடன், பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததாக இந்த தொடரின் கதை நகர்கிறது. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
துணை கதாபாத்திரம்
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia