ரகீம் யார் கான்
ரகீம் யார் கான் (Rahim Yar Khan), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் தெற்கில் அமைந்த ரகீம் யார் கான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இந்நகரம் 9 ஒன்றியக் குழுக்களைக் கொண்டது.[2] இந்நகரம், நாட்டின் தலைநகரமான இஸ்லாமாபாத்திற்கு தென்மேற்கே 789 கிலோமீட்டர் தொலைவிலும்; கராச்சிக்கு வடகிழக்கே 674.8 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தின் அருகில் ரகீம் யார் கான் வான்படை தளம் உள்ளது. வரலாறுஇந்தியப் பிரிவினைக்கு முன்னர் பகவல்பூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக ரகீம் யார் கான் நகரம்[3] இருந்தது. மக்கள் தொகை பரம்பல்2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ரகீம் யார் கான் நகரத்தின் மக்கள் தொகை 5,19,261 ஆகும். கல்வி
போக்குவரத்து![]() வானூர்தி நிலையம்ரகீம் யார் கான் நகரத்தில் சேக் சையத் பன்னாட்டு வானூர்தி நிலையம்[4]மற்றும் ரகீம் யார் கான் வான்படை தளம் உள்ளது. 2025 பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான சிந்தூர் நடவடிக்கையின் போது ரகீம் யார் கான் வானூர்தி நிலையம் பலத்த சேதமடைந்தது.[5][6][7] தொடருந்து நிலையம்![]() கராச்சி-பெஷாவர் நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதையில் அமைந்த ரகீம் யார் கான் தொடருந்து நிலையம், நாட்டின் பிற நகரங்களுடன் இணைக்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia