ரம்பா
ரம்பா (பிறப்பு: சூன் 5, 1974) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி வைத்துக்கொண்டார். இவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார். திரைப்படங்கள்
வாழ்க்கைக் குறிப்புகள்ரம்பா நடித்த முதல் படம் ஈ. வி. வி. சத்யநாராயணா இயக்கிய 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு என்ற தெலுங்குப் படமாகும். மலையாளத்தில் அவருடைய முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். அதே ஆண்டு வினீத்துடன் நடித்து வெளியான மற்றொருத் திரைப்படம் சம்பகுளம் தச்சன் ஆகும். தமிழில் அவர் நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993ஆம் ஆண்டு வெளியான உழவன் ஆகும். அவருடைய இரண்டாவது படமான 'உள்ளத்தை அள்ளித்தா' வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது. அவருடைய ரசிகர்கள் அவரை தொடை அழகி என்று அழைத்தனர். ரம்பா அவருடைய சகோதரர் வாசுவுடன் இணைந்து திரீ ரோசஸ் என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தார். அத்திரைப்படத்தில் ரம்பாவுடன் இணைந்து ஜோதிகா, லைலா ஆகியோர் நடித்தனர். ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பல்மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார். கனடா நாட்டைச் சேர்ந்த மேஜிக் உட் என்ற நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டிருந்தார்.[1] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia