ரம்யா சுப்பிரமணியன்
வி. ஜே. ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன் (Ramya Subramanian) என்பவர் ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். தொழில்2004 இல் மிஸ் சென்னை போட்டியில் ரம்யா பங்கேற்றார் [1] விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார்.[2] திருமணத்திற்குப் பிறகு, இவர் தொலைக்காட்சி பணிகளைக் குறைத்துக் பிற வேலையில் கவனம் செலுத்த அதிக விருப்பத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.[3] 2007 ஆம் ஆண்டில், ரம்யா மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார்.[4] 2015 இல் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக தோன்றினார்.[5][6] அதே ஆண்டில், இவர் 92.7 பிக் வானொலியில் தொகுப்பாளர் ஆனார்.[7] இவர் 2019 ஆகத்து மாதத்திற்கான வி இதழின் உடற்பயிற்சி சிறப்பு இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார்.[8] தனிப்பட்ட வாழ்க்கைரம்யா சென்னையில் பிறந்தார். பத்மா சேஷாத்ரி பால பவனில் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஆதர்ஷ் வித்யாலயாவில் தனது 11 வது மற்றும் 12 வது படிப்பை தொடர்ந்தார்.[சான்று தேவை] பின்னர் இவர் சென்னை எம். ஓ. பி. வைணவ மகளிர் கல்லூரியில் காட்சித் தொடர்பியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.[9] இவர் 2014 இல் அபர்ஜித் ஜெயராமனை மணந்தார், இந்த இணையர் 2015 இல் பிரிந்தனர்.[10] திரைப்படவியல்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia