மாசு என்கிற மாசிலாமணி
மாஸ் என்ற பெயரில் உருவான மாசு என்கிற மாசிலாமணி சூர்யாவின் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2015 மே 29 அன்று வெளியாகிய தமிழ் திகில் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.[3][4] முதன்மைப் பாத்திரங்களில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ் இணைந்து நடிக்க ஸ்டுடியோ கிரீன் மற்றும் 2டி புரொடக்சன்ஸ் இப் படத்தை தயாரித்தது. யுவன் ஷங்கர் ராஜா படத்தில் இசையமைக்க ஒளிப்பதிவு செய்தார் ஆர் டி ராஜசேகர்.[5] ரக்கசக்குடு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழிலில் வெளியாகிய அன்றே வெளியிடப்பட்டது. தமிழில் பெயர் இருந்தால் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் இறுதி நேரத்தில் இத்திரைப்படத்தின் பெயர் மாசு என்கிற மாசிலாமணி என மாற்றப்பட்டது.[6] நடிகர்கள்
படப்பிடிப்புஅதிகாரப்பூர்வமாக 14 ஏப்ரல் 2014 அன்று பூஜை ஆரம்பிக்கப்பட்டது..[7] வெங்கட் பிரபு மாஸ் (Masss) என்ற தலைப்பினை டுவிட்டர் மற்றும் பேஸ்புக் வழியாக 5 ஜூலை 2014 தேதி வெளியிட்டார்.[8] முதன்மை புகைப்படம் 11 ஜூலை 2014 இருந்து தொடங்க அறிவிக்கப்பட்டது.முதல் கட்ட படபிடிப்பு சென்னையிலும் இரண்டாம் கட்ட படபிடிப்பு ஊட்டி, கேரளா மற்றும் குலு மணாலி யிலும் படமாக்கபட்டது .டிசம்பர் தொடக்கத்தில் ஒரு சில சூர்யா மற்றும் ப்ரனிதா சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளை பல்கேரியா படமாகிய திரைப்பட குழு.[9][10] பல்கேரியா வை தொடர்ந்து படப்பிடிப்பு ஜனவரி 2015 புதுச்சேரியில் படபிடிப்புகள் நடை பெற்றது.[11] ஒலிப்பதிவு
திரைப்படத்தின் செம மாஸ் எனும் தலைப்பினை கொண்ட இசைக்கு மாத்திரம் தமன் இசை அமைத்துள்ளார். மற்றைய அனைத்து பாடல்களுக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஒரு பாடலுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார் கங்கை அமரன் மற்றைய ஏனைய பாடல்களுக்கு வரிகளினை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. பாடல்கள் அனைத்தும் 8 மே 2015 இல் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia