மார்ச் 12, 2017 இல் 2016–17 விஜய் அசாரே கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[3] அக்டோபர் 14, 2017 இல் 2017–18 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாட்டிற்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[4] சனவரி 8, 2018 இல் 2017–18 மண்டல இ20 லீக்கில் தமிழகத்திற்காக இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[5]
2018–19 ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு துடுப்பாட்ட அனிக்காக ஆறு போட்டிகளில் 22 இலக்குகளை வீழ்த்தியதன் மூலம் அதிக இலக்குகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பெற்றார்.[6] 2019–20 சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் 12 போட்டிகளில் 20 இலக்குகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார்.[7]
சூன் 2021 இல், இந்தியாவின் இலங்கைச் சுற்றுப்பயணத்திற்கான ஐந்து வலைப் பயிற்சிப் பந்து வீச்சாளர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[12] சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு இருபது20 சர்வதேச (டி20ஐ) போட்டிகளுக்கான இந்தியாவின் பிரதான அணியில் சேர்க்கப்பட்டார்.[13]
சனவரி 2022 இல், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்திய பன்னாட்டு இருபது20 அணியில் இரண்டு காத்திருப்பு வீரர்களில் ஒருவராக பெயரிடப்பட்டார்.[14]
சீனாவின் ஹாங்சோவில் நடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.[15]நேபாளத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் 4 நிறைவுகளில் 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். வங்கதேசத்திற்கு எதிரான அரையிறுதியில், 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.[16]