ராகெட்ரி: நம்பி விளைவு
ராகெட்ரி: நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையம் முன்னாள் விஞ்ஞானி மற்றும் விண்வெளிப் பொறியியலாளர் நம்பி நாராயணனின்[1] வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் ஓர் இந்திய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆகும்.[2] சிம்ரனுடன் முன்னணி பாத்திரமேற்று ஆர். மாதவன் நடிக்கிறார். மேலும் மாதவனே இப்படத்தை இணைந்து தயாரித்து, இணைந்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தமிழ், ஆங்கிலம், மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தை ஆனந்த் மஹாதேவன் இணைந்து இயக்குகிறார்.[3] இதன் இசையமைப்பாளர் சாம் சி. எஸ். ஆவர். இதன் கதை, நாராயணன் பிரன்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டதாரிமாணவராக இருந்த நாட்களையும், அவர் மீது தவறான உளவுச் குற்றச்சாட்டுக்கள் பதிந்ததைப் பற்றியதாகும். 2017-ற்கு முன் தயாரிப்புக்கு முந்தைய வேலைகள் ஆரம்பமான நிலையில், அக்டோபர் 2018ல் திரைப்படத்தின் டீஸர் வெளியானது. நடிகர்கள்
தயாரிப்புபடப்பிடிப்புதிரைப்படத்தின் படப்பிடிப்பு மும்மொழியில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிகழும்.[4] முதன்மை படப்பிடிப்பு 21 ஜனவரி 2019ல் தொடங்கியது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia