ராட்சசி (2019 திரைப்படம்)
ராட்சசி (Raatchasi) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான[1] இந்தியத் தமிழ் மொழி குழந்தைகள் சமூக நாடகத் திரைப்படமாகும். சையத் கெளதம்ராஜ் எழுதி இயக்கிய[2] இந்தப் படம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் எஸ். ஆர். பிரகாஷ்பாபு, எஸ். ஆர். பிரபு தயாரித்திருந்தார்.[3] இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4] ஹரீஷ் பேரடி, பூர்ணிமா பாக்கியராஜ், சத்யன், நாகினீடு, அருள்தாஸ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.[5] பிலோமின் ராஜ் படத் தொகுப்பையும், கோகுல் பெனாய் ஒளிப்பதிவையும் மேற்கொண்டிருந்தனர். 5 சூலை 2019 அன்று படம் வெளியானதும், நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[6] இந்த படம் 2020இல் கோல்ட்மினாஸ் டெலிஃபிலிம்ஸால் இந்தியில் மேடம் கீதா ராணி என மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இது யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 9 மாதங்களுக்குள் 180 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.[7] ஒலிப்பதிவுசீன் ரோல்டன் இசையமைத்த படத்தின் 5 பாடல்களைக் கொண்ட இசை, 20 சீன் 2019 அன்று வெளியிடப்பட்டது. பாடல்களை யுகபாரதி, தனிக்கொடி, சீன் ரோல்டன், சை. கௌதம்ராஜ் ஆகியோர் எழுதியுள்ளனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia