ராணிகஞ்ச்
ராணிகஞ்ச் (Raniganj) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டத் தலைமையிட நகரமான ஆசான்சோல் மாநகராட்சிப் பகுதிக்கு உட்பட்டது. இது ஆசான்சோலுக்கு தென்கிழக்கில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[1] புவியியல்ராணிகஞ்ச் நகரம் 23°37′N 87°08′E / 23.62°N 87.13°E பாகையில் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 91 மீட்டர் உயரத்தில் உள்ளது. ராணிகஞ்ச் பகுதிகளில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால், இப்பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு, தொழிற்சாலைகளும், நகர்புறமும் வளர்ந்தன. [2] ஆசான்சோல் மாநகராட்சியுடன் இணைத்தல்22 நகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ராணிகஞ்ச் நகராட்சி, ஜமுரியா நகராட்சி மற்றும் குல்தி நகராட்சிப் பகுதிககளை, 3 சூன் 2015 அன்று ஆசான்சோல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [3] மக்கள்தொகையியல்2011ம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ராணிகஞ்ச் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 129,441 ஆகும். அதில் ஆண்கள் 65,578 (52%) ஆகவும்; பெண்கள் 61,863 (48%) ஆகவும் இருந்தனர். ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 15,721 ஆகும். எழுத்தறிவு 77.65% ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 76.86% ஆகவும், இசுலாமியர் 21.92% ஆகவும், பிறர் 1.22% ஆகவும் உள்ளனர். [4] கல்வி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia