ராமன் பரசுராமன்
ராமன் பரசுராமன் (Raman Parasuraman) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். எம்.எசு. கோபிநாத் இயக்கினார். சிவகுமார், லதா, ரதி, சத்யராஜ், பண்டரி பாய் ஆகியோர் நடித்துள்ளனர். 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று திரைப்படம் வெளியிடப்பட்டது.[1] கதைமூன்று பழங்கால சிலை கடத்தல்காரர்கள் ஒரு கணவன் மற்றும் மனைவியைக் கொன்று, அவர்களின் இரண்டு மகன்களை அனாதைகளாக விடுகிறார்கள். சகோதரர்கள் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பரசுராமன் என்ற பெரியவன் தன் பெற்றோரைக் கொன்ற மூவரையும் பழிவாங்க வேண்டும் என்ற தீவிர வெறியுடன் சட்ட விரோதியாக வளரும்போது, இளைய ராம் என்ற மருத்துவர் மருத்துவராகிறார். பரசுராமன் அந்த மூவரையும் வெளிநாட்டில் தேடிச் சென்று அனைவரையும் கொன்று விடுகிறான். இறுதியில் சகோதரர்கள் மீண்டும் இணைகிறார்கள். நடிகர்கள்
தயாரிப்புராமன் பரசுராமன் சிங்கப்பூர், சப்பான், ஆங்காங்கு மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது.[2][3] ஏ.ஆர். சீனிவாசன் மூன்று எதிரிகளில் ஒருவராக நடிக்க ஒப்புக்கொண்டார். பின்னர் படம் கிட்டத்தட்ட முடிந்த போதிலும் அசல் நடிகர் பின்வாங்கினார்.[4] பாடல்கள்சத்யம் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[5][6] விமர்சனம்படத்தின் இசை, ஒளிப்பதிவைப் பாராட்டிய கல்கி இதழ் படத்தில் நகைச்சுவையின் பற்றாக்குறை இருந்ததை சுட்டிக்காட்டியது.[7] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia